வாசிங்டன், ஆக.3 ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுமார் 5 மாதங்களாக போர் நடைபெறுகிறது. ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள், உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்காவும், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரானும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்துக்கும் ஈரான் தடை விதித்தது. இதனால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.
ஒப்பந்தம்
இந்நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஈரானின் அணுஆயுத அச்சுறுத்த லுக்கு முடிவு கட்டுவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை உட னடியாகவும், முழுவதுமாகவும் திறப்பது குறித்து மேற்காசிய நாடுகளிடையே ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு விடுக்கப்பட்ட கோரிக்கையை வைத்தும், உலகின் எதிர்கால நன்மையைக் கருத்தில்கொண்டும், வெற்றி கரமான மற்றும் வளமான ஈரான் நிலைத்து இருப்பதற்காகவும் தாக்குதலை நிறுத்த நான் ஒப்புக் கொண்டேன்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானு டன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சியில் இணைய இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆதலால் ஈரான் மீதான புதிய தாக்குதல்களை நிறுத்தும்படி அமெரிக்க படை களுக்கு உத்தரவிடப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு குறித்து ஈரான் தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஈரானை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும் வகையில், அந்நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்த இருப்பதாக டிரம்ப் கடந்த சில நாள்களாகத் தெரிவித்து வந்தார்.
தாக்குதல் நிறுத்தம்
இந்தச் சூழ்நிலையில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தப்போவதாக டிரம்ப் அறி வித்துள்ளார். ஏற்கெனவே ஈரான் மீது நடத்திய தாக்குதலை கடந்த ஜூன் மாதம் மத்தியில் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தையடுத்து, அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
இதேபோல், ஈரானும் தனது தாக்குதலை நிறுத்தி வைத்தது. ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தது. பதிலுக்கு ஈரானும் தனது தாக்குதலை மேற்கொண்டது. மேற்காசிய போரின் ஆரம்ப கட்டத்தில் சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோதிலும், அண்மைக்காலமாக தாக்குதல் எதையும் நடத்தவில்லை.
சவூதி எச்சரிக்கை
ஆனால், ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினரின் ஆயுதக் கிடங்குகள் மீது அண்மையில் அமெரிக்காவுடன் சோ்ந்து சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியது. அத்துடன் அமெரிக்காவும், ஈரானும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் சவூதி அரேபியா வலியுறுத்தியிருந்தது.
அமெரிக்கர்களுக்கு
எச்சரிக்கை
எச்சரிக்கை
மேற்காசிய நாடுகளான பஹ்ரைன், இஸ்ரேல், ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கா்கள் விமானங்கள் ரத்து, தற்காலிகமாக வான்பகுதி மூடல், பிற போக்குவரத்து பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீதான புதிய தாக்குதல்களை நிறுத்த அமெரிக்க படைகளுக்கு தான் உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறி வித்துள்ளார்.
