ஜனநாயக அரசாங்கம் என்று மக்களை ஏமாற்றவே சட்டசபை வைத்துள்ளான். வயிறு வளர்ப்புக்கு வசதி உள்ளதாலேயே இது ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று சொல்லாமல், இது ஒரு நல்ல ஜனநாயக அரசாங்கம்தான் என்று சொல்லி உள்ளே போய் உட்கார்ந்து கொள்கிறான். எப்படியாவது இனத்தைக் காட்டிக் கொடுத்து மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான் பொறுக்கித் தின்றாலே போதும் என்று எண்ணுகிற இனத் துரோகிகள் அதிகமாய் விட்டார்கள் என்னும் போது சட்டசபை என்பது இப்படியில்லாமல் வேறப்படி இருக்கும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
