திருச்சி, ஆக. 2- திருச்சி, பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 31.07.2026 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பணித்தோழர்கள் கூட்ட மைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் முனைவர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் கிருபா சங்கர் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தமிழருவி மனோன்மணி மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பணித்தோழர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தமது உரையில் தோழர்கள் என்ற அன்பிணைப்போடு மகிழ்வுடன் பிறந்தநாள் கொண்டாடும் இந் நிகழ்வில் கலந்து கொள் வதில் பெருமகிழ்ச்சி யடைவதாகவும் கொள்கை என்ற இலட்சியத்தால் இந்நிகழ்வில் பங்கெடுப் பதில் பெருமை கொள்வ தாகவும் உரையாற்றினார்.
மேலும் தந்தை பெரியார் அவர்கள் செய்த சமூகப் புரட்சிகளிலேயே மூடநம்பிக்கை ஒழிப்பு புரட்சியே மிக முக்கியமானது. மூட நம்பிக்கை ஒழிப்பை தம் வீட்டிலிருந்து துவங்கியவர் தந்தை பெரியார் என்றும் அவருடைய இலட்சியத் திற்கு உறுதுணையாக திகழ்ந்தவர் நாகம்மையார் என்றும் உரையாற்றினார். மேலும் பகுத்தறிவு, சுயமரியாதை, ஒழுக்கம் என்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் அளித்த விளக்கமும் பெண்ணுரிமை களத்தில் அவர்கள் போராடிப் பெற்றுத்தந்த உரிமைகளையும் சிறப்பாக எடுத்துரைத்து
பிறந்த நாள் கொண்டாடிய பணித் தோழர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார். பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் செயலர் கவுதமன் மற்றும் பொருளாளர் செல்வி ஆகியோர் ஒத்து ழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இளங்கலை ஆசிரியர் சரளா நன்றியுரையாற்றினார்.
பணித்தோழர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
