தருமபுரி, மார்ச் 12- தருமபுரி பெரியார் படிப்பகம், புத்தக நிலைய உதவியாளர் அருணாவின் மாமனாரும், மாரவாடி இளைஞரணி தோழர் மு.அசோக் குமாரின் தந்தையுமான பா.முருகன் அவர்கள் கடந்த 6.3. 2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார்.
7.32023 அன்று அவரது உடலுக்கு 12 மணியளவில் தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில் மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத் தப்பட்டது. மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் அவர்களின் அண்ணன் மருமகன் ஆவார்கள்.
இந்நிகழ்வில் மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மண்டலத் தலைவர் அ.தமிழ்செல்வன், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வி.சி.க . மேனாள் மாவட்ட தலைவர் எம்.எஸ்.ராமன், பிஎஸ்என்எல் மணி, ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் சக்கரை, திராவிடர் கழகத் தோழர்கள் அனைத்துக்கட்சி பொறுப்பாளர்கள் உறவினர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்