எஃப்அய்ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்

2 Min Read

சென்னை, ஜூலை 31– கோவை மருத்துவ இணையர்களான சகுபர் சாதிக் – ஹஸ்மத் பர்சானா, தங்கள் மருத்துவமனையை அடமானமாக வைத்து எல்அய்சி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்றனர்.

கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஒரே தவணையாக ரூ.4 கோடி செலுத்து வதாக பேசி முடிவு செய்தனர்.

அந்தத் தொகையை எல்அய்சி நிதி நிறுவனத்தில் செலுத்தி பத்திரத்தை மீட்டு ரெப்கோ வங்கியில் கூடுதல் கடன் பெறும் நோக்கில், தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திகா கனகராஜ், மகாராஜா ஆகியோரிடம் இருந்து ரூ.3.94 கோடியை வட்டிக்கு கடனாகப் பெற்றனர். ரூ.2.43 கோடியை எல்அய்சிக்கு செலுத்திவிட்டு, மீதியை ஜூலை 30-க்குள் செலுத்த அவகாசம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், கூடுதலாக கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தினர் மீது கோவை ஆர்.எஸ். புரம் காவல் ஆய்வாளரிடம் மருத்துவ இணையர் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், அந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், தங்கள் வங்கிக் கணக்கை காவல்துறையினர் முடக்கியுள்ளதாக குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ இணையர் மனுத் தாக்கல் செய்தனர்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அசன்முகமது ஜின்னா, வழக்குரைஞர் எஸ்.உதயகுமார் ஆகியோர், “புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்தவர்களின் வங்கிக் கணக்கையே காவல்துறையினர் முடக்கியது ஒருதலைபட்சமானது.

இணையவழி மோசடி புகார்கள் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் எஃப்அய்ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குநர் ஏற்கெனவே சுற்றறிக்கை பிறப் பித்துள்ளார்” என்றனர்.

இதையடுத்து நீதிபதி, ‘‘இணைய வழி மோசடி தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் எஃப்அய்ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல்துறையினருக்கு அதிகாரமில்லை. பணத்தை மோசடி செய்ததாக மனுதாரர்கள் மீது பைனான்சியர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.

எனவே, வங்கிக் கணக்கு முடக்கத்தை வங்கி நிர்வாகம் உடனே நீக்க வேண்டும். மனுதாரர்கள் தங்களிடம் உள்ள தொகையைக் கொண்டு எல்அய்சியில் வாங்கிய கடனை பைசல் செய்ய வேண்டும். பின்னர் ரெப்கோ வங்கியில் கடன் பெற்று தனியார் நிதி நிறுவனர்களின் கடனை பைசல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *