முதுமையை தடுக்கும் குடல் நுண்ணுயிரிகள்!

மனிதனின் முதுமையை தள்ளிப்போடும் ரகசியம் நமது குடலிலேயே மறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘டைஜெஸ்டிவ் டிசீஸ் வீக் 2026’ மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, வயதான எலிகளின் குடலில் இளமையான நுண்ணுயிரிகளை மீண்டும் செலுத்தியபோது, அவை உயிரியல் ரீதியாக இளமையடைந்ததுடன், கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதிலிருந்தும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன.

இந்த சோதனைக்காக, எலிகள் இளமையாக இருந்தபோது சேகரிக்கப்பட்ட குடல் நுண்ணுயிரிகளை, அவற்றின் முதுமைக் காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செலுத்தினர். இதனால் அந்த எலிகளுக்கு உடலில் ஏற்படும் அழற்சியும், டி.என்.ஏ., சேதாரங்களும் குறைந்து, கல்லீரல் திசுக்கள் ஆரோக்கியமடைந்தன.

மேலு ம், புற்றுநோயை உருவாக்கும் ‘எம்டிஎம்2’ என்ற மரபணுவின் அளவும் கணிசமாகக் குறைந்து, மூலக்கூறு அளவில் அவை இளம் எலிகளைப் போலவே மாறின. நமது செரிமான அமைப்பில் வாழும் பல கோடிக் கணக்கான நுண்ணுயிரிகளின் தொகுப்பு, மனிதர்களின் முதுமையைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்ற வலுவான ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்குகிறது.

தற்போது எலிகளில் மட் டுமே நிரூபிக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மனிதர்களின் வயது முதிர்வு தொடர்பான நோய்களைக் குறைத்து, ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *