மாணவர்கள் போராட்டம் குறித்துச் சர்ச்சைப் பேச்சு பா.ஜ.க. தலைவர் மகேந்திர பட் மன்னிப்பு கோரினார்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 28 மாணவர்கள் குறித்து ‘சர்ச்சைக்குரிய’ வகையில் பேசியதற்காக உத்தரகண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் பகிரங்கமாக மன்னிப்பு கோரி யுள்ளார். தான் பேசியதில் ஏதேனும் ஒரு வார்த்தை யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அதற்கு தான் வருந்துவதாகவும், யாரையும் புண் படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ள நிலையில், நீட் தேர்வுத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள் குறித்து ‘சர்ச்சைக்குரிய’ கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த விமர்சனங் களைத் தொடர்ந்து உத்தரகண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் மன்னிப்பு கோரியுள்ளார்.

26.7.2026  அன்று மகேந்திர பட் தனது சமூக வலைதள பக்க பதிவில், “25.7.2026–-இல் நான் பேசிய வார்த்தைகளோ அல்லது கருத்துகளைத் தெரி வித்த விதமோ யாருடைய மனதையாவது அறியாமலேயே புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்பும் கோருகிறேன். யாரை யும் புண்படுத்துவது எனது நோக் கம் அல்ல” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த 25.7.2026இல் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான வேலையில்லாத இளைஞர்களையும் மாணவர்களை ‘சர்ச்சைக்குரிய’ வகையில் ஒரு இழிவான வார்த்தையைப் பயன் படுத்தி பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் தீவிரமடை வதற்கு முன் பட் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோடியால், மன்னிப்பு கோரத் தவறினால் காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்தார். இதனிடையே, மகேந்திர பட் பேசிய காட்சிப் பதிவு இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் இந்தக் மன்னிப்பைக் கோரியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *