தூத்துக்குடி, ஜூலை 27- தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டம் 26.07.2026 அன்று மாலை 6 மணிக்குத் தோப்புப் பகுதியில் நடைபெற்றது.
கழகப் பேச்சாளர் தஞ்சை. இரா.பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார். இளைஞரணி மாவட்டச் செயலாளர் செ.நவீன் தலைமையேற்றார்.மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.பிரசாத் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், மாநகரத் தலைவர் த.பெரியார்தாசன், மாநகரச் செயலாளர் த.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டத் தலைவர் சு.காசி முன்னிலையுரையாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தொடக்கவுரை யாற்றினார். இறுதியில் மாவட்ட மாணவர் கழகத் தோழர் செ.வள்ளி நன்றிகூற கூட்டம் சிறப்புடன் நிறைவுபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் மு.பாலமுருகன், மாவட்டத் தொழிலாளரணிச் செயலாளர் த.நாகராஜ், மாவட்டத் துணைச்செயலாளர் செ.செல்லத்துரை, மாவட்ட மகளிரணி செ.அழகு, பகுத்தறிவாளர் கழகத் தோழர் கி.கோபால்சாமி, தி.மு.க.இலக்கிய அணி மோ.அன் பழகன், பழனிச்சாமி, ம.நே.ஜ.கட்சி. அசன், தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழர் விடியல் கட்சித் தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
