சென்னை – ஜுலை 27, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சித்ரா திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கி நடைபெற்ற மாபெரும் மாணவர் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் (26.7.2026) திராவிட மாணவர் கழகம் (DSF) பங்கேற்றது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கண்டன உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், துணைச் செயலாளர்கள் தே. நர்மதா, செ.பெ.தொண்டறம், தஞ்சை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சிந்தனை அரசு மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் நிலவன், இசையமுது, யோவான், பகுத்தறிவு, புவனேஷ்வரன் ஆகியோர் பங்கேற்று நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். இதில் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர். நீட் ஒழிக்கப்படும் வரை தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்தனர்.
