திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாகத் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் என்ற அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஆனால், இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
ஆளுநர் என்பவர் மாநில அரசின் அங்கம் தானே! மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு உட்பட்டவர் தானே! அவருக்கு என்ன தனித்த அதிகாரம்? மாநில அரசின் கொள்கை முடிவுக்கு, ஆணைக்கு மாறாக அவர் விருப்பப்படி நடக்கலாமா?
தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் மவுனமாக இருப்பது ஏன்? ஏன்?
