நீட்டை ஒழிக்கும்வரை திராவிடர் கழகத்தின் போராட்டம் ஓயாது!

7 Min Read

ஊன்றிப் படித்து – உண்மையை பரப்புங்கள்!
*தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதுமா?
* நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படவேண்டாமா?
* மாணவர்கள் போராட்டத்தை மடைமாற்றியது நியாயமா?

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதுமா? நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படவேண்டாமா? மாணவர்கள் போராட்டத்தை மடைமாற்றியது நியாயமா? நீட்டை ஒழிக்கும்வரை திராவிடர் கழகத்தின் போராட்டம் ஓயாது! ஊன்றிப் படித்து – உண்மையை  பரப்புங்கள்!  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீட் தேர்வில் நடந்துவரும் முறைகேடுகள் காரண மாகக் கொதிப்படைந்த மாணவர்கள் அதற்கெதிராகப் பல்வேறு இடங்களிலும் போராடத் தொடங்கினர். டில்லியிலும், பல மாநிலங்களின் நகர்புறங்களிலும் முன்பு எப்போதும் காணாத அளவுக்கு ‘‘நீட் தேர்வு முறை ஒழிக்கப்பட வேண்டும்’’ என்பதையே இலக்காகக் கொண்டு தொடங்கி, நாளும் பெரிதாகி வந்தது – மாணவர்களின் நியாயமான போராட்டம்! இதனை யடுத்து, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற அமைப்பு டில்லியில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. அதில் ஏராளமாக இளைஞர்களும், மாணவர்களும் பங்கெடுத்தனர்.  அவர்களுக்கு ஆதரவு தந்த அரசியல் கட்சிகளும், தலைவர்களும் (நாடாளுமன்றத்தையே நடத்த விட முடியாத அளவிற்கு) இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவது முக்கியம் என்பதை வலியுறுத்தியும், நாளும் பெருகியது. தன்னெழுச்சியாகத் திரண்ட மாணவர், மாணவிகள் மீது, தடியடி, கண்ணீர்ப் புகை, பெல்லட் (சிறு குண்டுகள்) வீச்சு போன்றவற்றால், போராட்டத்தை ஒடுக்க நினைத்தது ஒன்றிய அரசு. ஆனாலும், போரட்டம் தொடர்ந்ததுடன், பல மாண வர்களின் ரத்தம் சிந்திய கோரக் காட்சிகளுக்குக் கண்ட னம் தெரிவித்தும், மாணவர்களது நீட் தேர்வு ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்தும் நாடஙெ்கும் விரி வடைந்த  அறப் போராட்டத்தின் விளைவாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகினார் என்ற நிலையில், இதன்மூலம் மாணவர்கள் போராட்டம் வெற்றி பெற்று முழுமை அடைந்து விட்டது என்று கூறி ஆறுதல் கொள்ளவோ அல்லது மகிழ்ந்திடவோ முடியுமா என்றால், பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும் இலக்கை மறக்காது, பொது நிலையில் நின்று ஆய்வு செய்தல் மிகவும் அவசியம் – அவசரம்.

ஒன்றிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை!

நாளும் வலுத்து வந்த ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தினைக் கைவிட இரண்டு அமைச்சர்கள், ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் மாணவர் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசினர். பேச்சுவார்த்தையில் போராட்டக் குழுவின் சார்பில் பங்கெடுத்த கரப்பான் பூச்சி கட்சியின் பிரதிநிதிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோர் வைத்த கோரிக்கைகள், மூன்று என்று செய்திகள் வெளிவந்தன.

  1. நீட்வினாத்தாள்கசிவுமற்றும்குளறுபடிகளுக்குப்பொறுப்பேற்றுஒன்றியகல்வித்துறைஅமைச்சர்தர்மேந்திரபிரதான்தனதுபதவியைவிட்டுவிலகவேண்டும்.
  2. நீட்தேர்வுமுறைகேடுகாரணமாகவும், மனஉளைச்சலாலும்உயிரிழந்த/தற்கொலைசெய்துகொண்டமாணவர்களின்குடும்பங்களுக்குத்தலாரூ.ஒருகோடிஇழப்பீடுவழங்கவேண்டும்.
  3. டில்லிபோராட்டத்தில்பங்கேற்றமாணவர்கள்மற்றும்இளைஞர்கள்மீதுகாவல்துறையினரால்பதிவுசெய்யப்பட்டமுதல்தகவல்அறிக்கைகளை (FIR) முழுமையாகரத்துசெய்யவேண்டும்; மேலும், இப்போராட்டம்தொடர்பாகஎதிர்காலத்தில்எந்தவிதசட்டநடவடிக்கையோஅல்லதுவழக்கோதொடரப்படாதுஎன்றஎழுத்துப்பூர்வஉறுதிமொழியைவழங்கவேண்டும்.

இந்த மூன்றில், எதற்காக இந்தப் போராட்டம் வெடித்ததோ அந்த முக்கிய இலக்கான நீட் தேர்வு ரத்து – அகில இந்திய அளவில் தேர்வு நடத்தும் NTA தேர்வு முகமை அமைப்பு கூடாது என்பது எனவும் வற்புறுத்தப்பட்டதாகவே தெரியவில்லை.

“எங்களுக்கு சில நாள்கள் அவகாசம் தாருங்கள்” என்று மாணவர் குழுவிடம் ஒன்றிய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதாக, சில செய்திகள் தெரிவித்தன.

பிறகு அடுத்த நாளே, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டுவிலகினார் என்ற செய்தி வந்தது. புறத் தோற்றத்தில் மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்பதுபோல, உணர்ச்சியால் உந்தப்பட்டு, போராட்டம் நடத்திய மாணவர்களுக்குத் தோன்றினாலும், உண்மையில் இந்த  தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் – எந்த முக்கிய நோக்கத்திற்காக அவர்கள் போராட்டம் நடத்தி, கண்ணீர்ப்புகை, கஷ்ட நஷ்டங்களைப் பெற்றார்களோ, அது நிறைவேறியுள்ளதா என்றால், அந்தக் கேள்விக்கு அவர்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து அறிவுபூர்வமாகச்  சிந்தித்தால்,  பதில் என்னவாக இருக்கும்?

  1. ‘நீட்’ தேர்வு முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான ஓர் அநியாயம். கூட்டாட்சித் தத்துவத்திற்கே குழிபறித்த திணிப்பு. இதை நாம் பலமுறை விளக்கியுள்ளோம்.
  2. அரசியலமைப்புச்சட்டத்தின்ஏழாம்அட்டவணையில், அதிகாரப்பகிர்வில்உள்ளபடிமாநிலப்பட்டியலில்உள்ளஅதிகாரங்களில்தேர்வுநடத்தும்அதிகாரம், பல்கலைக்கழகங்களின்பறிக்கப்படமுடியாதஒன்று.

அதை அப்பட்டமாக மீறியது ஒன்றிய அரசு.

  1. முதலில் ‘நீட்’டில்ஆரம்பித்து, பலபடிப்புகளுக்குநெக்ஸ்ட், கியூட்என்றஅக்கப்போர்கொடுமைகள்நீளுவதைப்போல, இந்தஅகிலஇந்தியதேர்வுமுகமை (NTA) தனக்குஇல்லாதஅதிகாரங்களைவிரித்துக்கொண்டேபோனது.
  2. இதற்குக்காரணம், ‘தகுதி, திறமை, ஊழலைஒழிப்பது’ என்றுதொடக்கத்தில்கூறப்பட்டுதான்இப்படிஒருசட்டவிரோத, நியாயவிரோத – தேர்வுமுகமை, உச்சநீதிமன்றத்தின்ஒத்துழைப்புடன்தொடங்கப்பட்டது!

இதுவரையில் நடைபெற்ற நீட் தேர்வானது ஊழலற்ற முறையில் நடைபெற்றிருக்கிறதா?

அது தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் எந்த ஒரு தேர்வாவது ஊழலற்ற முறையில் நடைபெற்றது என்று ஆட்சியாளரோ, தேர்வு முகமையோ விரலை மடக்க முடியுமா என்பது ‘நீட்’ தேர்வு எதிர்ப்பாளர்களின் நியாயமான கேள்வி அல்லவா?

மாநிலங்கள் – பல்கலைக்கழகங்களின் தனி உரிமையைப் பறித்து, ஊழல் மயம், கார்ப்பரேட் கனவான்களின் கொள்ளை, பள்ளிகளுக்குப் பதில் கோச்சிங் சென்டர், அவர்களுக்கும் கேள்வித் தாள் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட விசித்திர உறவுகளும் – லஞ்சம் பெற்ற கதைகளும் வழக்குகளாக வந்துள்ள நிலைதானே இன்று யதார்த்தம்!

நீட் தேர்வு சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும், கிராமப்புற மாண வர்களுக்கும் எதிரானது என்பதைத் தொடர்ந்து நாம் எச்சரித்து வருகிறோம். நாடு முழுவதும் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் நம்மை ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்தன. தமிழ்நாட்டு அனிதாக்கள் தொடங்கி, பல மாநிலங்களிலும் தொடர்கதையாகி வருகிற கொடுமை, நீட் தேர்வு மாநில உரிமைக்கு மட்டுமல்ல, மாணவர்களின் நலத்திற்கும், எதிர்காலத்திற்கும் எதிரானது என்பதை நாளும் நிரூபித்து வருகிறது.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தமிழ்நாட்டுக் கட்சிகளும்தான் இதனை முதன்முதலில் அடையாளம் கண்டு, எதிர்த்தன!

‘திராவிட மாடல்’ ஆட்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வின் விளைவுகளைக் குறித்து ஆராய்ந்திட உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, விரிவான அறிக்கை பெற்று, அதையொட்டி இரண்டு முறை மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆளுநர்கள் மூலமும், உள்துறை அமைச்சகம் மூலமும் அதனைக் கிடப்பில் போட்டும் மற்றும் இறுதியில் முடியாது என்றும் ஒன்றிய அரசால் கூறப்பட்டது.

இந்தியாவுக்கே, தமிழ்நாடுதான்
முதன்முதலில் வழிகாட்டியது!

தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தவிர மற்ற அத்தனைக் கட்சிகளும் ‘நீட் தேர்வை’ எதிர்த்த நிலைப்பாடுதான் முதன் முதலில் இந்தியாவுக்கே வழிகாட்டியது.

வழமைபோல, பெரியாரின் சமூகநீதிக் கொள்கை கள்தான் இந்தியாவிற்கே வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம் என்பது இப்போது விளங்காத அறிவு சூன்யங்களுக்கும் விளங்கிடக் கூடும்.

இந்த நிலையில் மாணவர்களின் டில்லி அறப் போராட்டம் – வெற்றி என்று கூறுவதைவிட, திசை திருப்பப்பட்டு விட்டதா என்ற கவலைதான் நம்மைப் போன்ற தொடக்கம் முதலே இதனைச் சரியான அடையாளம் கண்டவர்களுக்கு ஏற்படுகிறது!

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை எம்.ஜி.ஆர் ஆட்சி கொண்டு வந்தபோதே அதனை எதிர்த்து தொடர்ந்து 21 ஆண்டுகள் போராடி வெற்றி கண்டு, மாநிலங்களின் கல்வி உரிமையைக் காத்த, காத்து வருகின்ற இயக்கங்கள் திராவிடர் கழகமும், தி.மு.க.வும்தான்! இன்றும் இந்த இரட்டைக்குழல்களும் ‘நீட் தேர்வு’ என்ற சூழ்ச்சிப் பொறி மூலம் ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் டாக்டர்கள் கனவு பறிக்கப்படுவதைத் தடுக்கவும், உயிர்ப் பலிகளைத் தடுக்கவும் களம் கண்டு போராடவும் என்றும் தயாராக இருக்கின்றன.

முன்பு, தி.மு.க. ஆட்சியை இதற்காகக் கடுமையாகக் குறை கூறி, ஆட்சிக்கு வந்துள்ள புதிய முதலமைச்சர், ‘‘த.வெ.க. ஆட்சி, நீட் தேர்வை எதிர்க்கிறது’’ என்று சொன்னால் மட்டும் போதாது; மாநில ஆட்சி – நீட் தேர்வை ரத்து செய்வதற்கு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதும் முக்கியக் கேள்வியாகும்.

ஒன்றிய அரசின் சட்டப்பூர்வமான
ஒப்புதல் வாக்குமூலம்!

கேள்வித் தாள் ‘லீக்’ ஆனால், தண்டனை என்ற சட்டமே, ‘ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல நீட் தேர்வு’ என்பதை ஒன்றிய அரசே சட்டப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலத்தை உலகத்திற்கே தெரியப்படுத்தும் ஒன்றாகும்.

நீட் தேர்வின் சூழ்ச்சியைத் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டு தமிழ்நாடு போராடி வந்தாலும், பிற மாநிலங்கள் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டன. அதனால்தான் கடந்த ஆண்டுமுதலே எதிர்ப்புகள் போராட்ட வடிவம் எடுத்தன. முழுமையான நீட் ஒழிப்பு என்ற நோக்கத்துடன்தான் இப்போராட்டம் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால், அதை ஓர் அமைச்சரின் பதவி விலகலோடு சுருக்கியது யார்? அவரது பதவி விலகலையே பெரிய வெற்றியாகக் காட்டி, போராட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்பியது யார்? இதன் பின்னணியில் இருப்பது யார்?

தர்மேந்திர பிரதான் பதவி விலகலையடுத்து, ஓர் அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்தானே கல்வி அமைச்சராகியிருக்கிறார்? ‘நீட்’ தேர்வு ஒழிப்பு என்ற கோரிக்கைக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா?

மாணவர்களே, பெற்றோர்களே, உங்கள் கல்வி உரிமை இப்படி திசை திருப்பல்களுக்கும், மடை மாற்றத்திற்கும் ஆளாவது நியாயமா? சிந்தியுங்கள்!

வெற்றி பெறும் வரை போராடுவோம் என்பதே திராவிடர் கழகத்தின் நிலை!

தொடர்ந்து அறவழியில் போராடுவோம் – வெற்றி பெறும் வரை போராடுவோம் என்பதே திராவிடர் கழகத்தின் நிலை!

அதை மக்களிடம் விளக்கும் வகையில், வரும் ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1, 2 ஆகிய நான்கு நாள்கள், ஆறு முனைகளிலிருந்து தொடங்கி நடைபெறும் இரு சக்கரவானப் பரப்புரைமூலம் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பொதுமக்களுக்கு விளங்க வைப்போம்!

இறுதி வெற்றி நமக்கே!

 கி.வீரமணி

      தலைவர்,
திராவிடர் கழகம்

 

 

27.7.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *