திருவனந்தபுரம், ஜூலை 26 கேரள பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியர் பணியிடங்களை 9-லிருந்து 6-ஆகக் குறைக்கும் வரைவுத் திட்டத்தை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி கேரள உயர்கல்வித் துறை இயக்குநர் வெளியிட்ட பொது இடமாற்ற வரைவு ஆணையில், கல்லூரி தமிழ்த்துறையில் இருந்த 3 பேராசிரியர் பணியிடங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணியிடங்களைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தியும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கேரள முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கேரள முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் எக் காரணத்தைக் கொண்டும் குறைக்கப் படாது என்று முதலமைச்சர் உறுதியளித் துள்ளதாக திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் வீராணம் சு. முருகன் தெரிவித்துள்ளார்.
கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணியிடங்கள் குறைப்பு நிறுத்தம் கேரள முதலமைச்சர் உறுதியளிப்பு!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
