வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது சென்னை உயர்நீதிமன்றம்

1 Min Read

சென்னை, ஜூலை 26- வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குரைஞர் சு.குமார தேவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட் டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை புளியந் தோப்பில் இந்தியன் நேஷனல் லீக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்  வழக்குரைஞர் சு.குமாரதேவன் இந்து பயங்கரவாதம் என பேசியதற்காக அவர் மீது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக புளியந் தோப்பு காவல் நிலை யத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் சு.குமார தேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர், மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் நோக்கில் மனுதாரர் பேசவில்லை என்றும், வெறுமனே பேசியதைத் தவிர, வேறு எந்த அசம்பாவித சம்பவங்களிலோ அல்லது சட்டவிரோதச் செயல்களிலோ அவர் ஈடுப்படவில்லை என்றும் வாதம் வைத்தார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது என்றும், வெறும் பேச்சை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை மேற்கொண்டு நடத்து வதாலும், மனுதாரரை விசாரணையை எதிர்கொள்ள வைப் பதாலும் அது அடக்கு முறையாகவே முடியும் எனக்கூறி மனுதாரர் சு.குமாரதேவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *