சென்னை, ஜூலை 26- வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குரைஞர் சு.குமார தேவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட் டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை புளியந் தோப்பில் இந்தியன் நேஷனல் லீக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் இந்து பயங்கரவாதம் என பேசியதற்காக அவர் மீது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக புளியந் தோப்பு காவல் நிலை யத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் சு.குமார தேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர், மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் நோக்கில் மனுதாரர் பேசவில்லை என்றும், வெறுமனே பேசியதைத் தவிர, வேறு எந்த அசம்பாவித சம்பவங்களிலோ அல்லது சட்டவிரோதச் செயல்களிலோ அவர் ஈடுப்படவில்லை என்றும் வாதம் வைத்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, வெறும் பேச்சு மட்டுமே குற்றமாகாது என்றும், வெறும் பேச்சை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை மேற்கொண்டு நடத்து வதாலும், மனுதாரரை விசாரணையை எதிர்கொள்ள வைப் பதாலும் அது அடக்கு முறையாகவே முடியும் எனக்கூறி மனுதாரர் சு.குமாரதேவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
