2026–2027ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 26- தமிழ்நாட்டில் 2026-20–27-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவ (BDS) படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 13,999 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 29 முதல் ஜூலை 23 வரை விண்ணப்பிக்க ஏற்கெனவே அவகாசம் வழங்கப் பட்டிருந்தது. இதுவரை அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இருப்பினும், கடந்த ஆண்டை விட விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாலும், கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதாலும் மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம்

ஜூலை 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையவழிப் பதிவு மீண்டும் திறக்கப்படும். இதுவரை விண்ணப்பிக்கா தவர்கள் மற்றும் விண்ணப்பப் பதிவை முழுமையாக முடிக்கா தவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

திருத்தங்களுக்கு அனுமதி யில்லை: ஏற்கெனவே விண்ணப்பித்த வர்கள் தங்கள் விண்ணப்பங்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பங்களில் எழுத்துப்பிழை போன்ற சிறிய தவறுகள் இருந்தால் பதற்றமடையத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது இத்தவறுகள் உரிய முறையில் சரிசெய்யப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் tnmedicalselection.org என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இறுதி வாய்ப்பு என்றும், இதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெளிவுபடுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *