அழகுபடுத்தி வைக்க
அலங்காரப் பொருளல்ல நான்..!
நீ அனுதினமும்
அற்புதம் அடைய
உதவிடும் தேன் நான் !
என்னை எடு !
என்னைப் புரட்டு !
உன்னைத் தேடு
உன்னைத் திரட்டு !
புரட்டும் ஒவ்வொரு
பக்கத்திற்குள்ளும்….
தனிமைக்குத் துணைவன்..
தாயாய் அரவணைப்பவன்..
புத்தாக்கம் புகட்டுபவன்..
புரட்டினால் மகிழ்வேன் !
மூடினால் வாடுவேன் !
என்னைத் திற…
உன்னை உயர்த்து…
தேடினால் வருவேன்..
படித்தால் பேசுவேன்…
