வழிபாட்டுத் தலங்களில் மனிதனை மனிதன் சுமக்கும் அவலங்கள்!

2 Min Read

அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு படம் நம் நெஞ்சை உறைய வைக்கிறது. மலைப்பாதையில், இரண்டு ஏழைத் தொழிலாளர்கள், ஒரு பெரிய மூங்கில் கம்பில் தங்களைப் பிணைத்துக் கொண்டு, ஒரு நபரைச் சுமந்து செல்கின்றனர்.

அவர்களது முகம் வேதனை யையும், பாரத்தையும் தெளி வாகக் காட்டுகிறது. ஆனால், அவர்கள் சுமந்து செல்லும் நபர், கண்ணாடியணிந்த, வசதியான தோற்றம் கொண்ட ஒருவர். இந்தப் படம், ஆன்மிகம் என்ற பெயரில் இன்றும் நம் சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய மனிதாபிமானமற்றச் செயலை அப்பட்ட மாக்கிக் காட்டுகிறது.

ஆன்மிகமா?
அல்லது அடிமைத்தனமா?

உலகெங்கிலும் பல மத வழி பாட்டுத் தலங்கள், மலைகள் மற்றும் கடினமானப் பாதைகளில் அமைந் துள்ளன. சில நாடுகளில், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதி யோர்களை மட்டும், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, மிகக் குறைந்த தூரத்திற்குச் சுமந்து செல்லும் நடைமுறை உள்ளது. ஆனால், இந்தி யாவில் நிலைமை முற்றிலும் வேறானது.

இங்கே, ஆன்மிகச் சுற்றுலா என்ற பெயரில், உடல்திறன் கொண்ட வசதி படைத்தவர்கள், சொற்பக் கூலிக்கு ஏழைத் தொழிலாளர்களைச் சுமக்கச் செய்கிறார்கள்.

தின்று கொழுத்த ஒரு கூட்டம், சுகமாக உட்கார்ந்துகொண்டு, தங்களைப் போலவே இரத்தமும், சதையும் கொண்ட சக மனிதர்களைக் துன்பப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இது ஆன்மிகம் அல்ல, இது நவீன கால அடிமைத்தனம்.

ஸநாதனம் என்ற பெயரில் மனிதாபிமானக் கொலை!

இந்தக் கொடுமைக்கு முதுகெலும்பாக இருப்பது, ஸநாதனம் என்ற பெயரில் கூறப்படும் தவறான சித்தாந்தங்கள். “சுமப்பவன் சென்ற பிறவியில் செய்த பாவம், சுகமாக வாழும் நான் சென்ற பிறவியில் செய்த புண்ணியம்” – இப்படிக் கூறுவது, சக மனிதனை இழிவுபடுத்தும் கேவலமான விதி.

இந்த விதி, மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துகிறது. உழைப்பவனுக்குக் கிடைக்கும் குறைந்தக் கூலியையும், அவன் அனுப விக்கும் துயரத்தையும், அவனது கர்மவினையாகக் காட்டி, அவனை அடிமையாகவே வைத்திருக்க முயல்கிறது.

‘சுமப்பவனும் சக மனிதன் தானே’ என்ற மனிதாபிமானத்தை, இந்தச் சித்தாந்தம் சாகடிக்கிறது. இது மக்களைக் கூறுபோட்டு, சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும்.

விழிப்புணர்வு மற்றும் மாற்றம்!

இந்தப் பழக்கம், மனித உரிமை களுக்கு எதிரானது. மனிதனை மனிதன் சுமப்பது என்பது, அவனது கண்ணி யத்தைப் பறிக்கும் செயலாகும். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும், தங்களது சொந்த முயற்சியிலேயே செல்ல வேண்டும். முடியாதவர்களுக்கு, நவீனத் தொழில்நுட்ப வசதிகள் அல்லது விலங்குகளின் உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

சமூகத்தில் நிலவும் இந்த மனிதாபிமானமற்றச் செயல் குறித்து, நாம் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்த அடிமைத்தனமானப் பழக் கத்தை ஆதரிப்பது, நாமும் அந்த அநீதியில் பங்கேற்பதைப் போன்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *