சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா கூட்டங்கள் சிறப்புடன் நடத்த தஞ்சை மாநகர கலந்துரையாடலில் முடிவு

தஞ்சை, ஏப். 28- சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விழா கூட்டங்களை சிறப்புடன் நடத்துவது என தஞ்சை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

25.04.2024 அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.

மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செயலாளர் தனபாலன், ஒன்றிய பகுத்தறிவாளர்களாக செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் மாநகர துணை தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.சி.அரங்கநாதன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் முனைவர் வே இராஜவேல், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூர பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அ.பிரகாஷ், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட ப.க செய லாளர் பாவலர் பொன்னரசு, மாநில ப.க அமைப்பாளர் கோபு.பழனிவேல், கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை கா.குருசாமி, காப்பாளர் மு.அய்யனார், பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாவட்ட ப.க தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வு ஜெயராமன், மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினார். கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன் இறுதியாக நன்றியுரை ஆற்றினார்.

கூட்டத்தில், பெரியார் பெருந் தொண்டர் தஞ்சை சி எஸ் ஆர் நாரா யணசாமி அவர்களின் வாழ்வினையர் நாகரத்தினம் அம்மாள், திருவையாறு வேலு சிட்பண்ட்ஸ் உரிமையாளர் பெரியார் பெருந்துண்டார் மு.வடி வேலு ஆகியோர் மறைவிற்கு இக்கூட் டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது எனவும், 24.3.2024 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், சுயமரி யாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் அவர்கள் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தை மே-2 ஆம் தேதி தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில் தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பிலும், மே 6ஆம் தேதி திருவையாறில் மாங்காடு மணியரசன் பங்கேற்கும் கூட்டத்தினையும் சிறப்புடன் நடத்து வது எனவும், ஆண்டு முழுவதும் மாந கரத்தின் அனைத்து பகுதிகளிலும் நூற் றாண்டு விழா கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது எனவும், உலகின் ஒரே பகுத் தறிவு ஏடான விடுதலை நாளிதழுக்கு தலைமை கழகம் நிர்ணயிக்கும் சந் தாக்களை சேர்த்து வழங்குவது எனவும், தஞ்சாவூர் கீழ அலங்கத்தில் பல ஆண்டு களாக அன்னை மணியம்மையார் பெய ரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கரந்தையில் செயல் பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இணைந்து செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அன்னை மணியம்மையார் பெயரை சூட்டுமாறு தஞ்சாவூர் மாநகராட்சியை மாநகர திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய பொறுப்பாளர்கள்:

தஞ்சை மாநகர திராவிடர் கழகம்
மாநகரத் தலைவர் – பா.நரேந்திரன்
மாநகர துணைத் தலைவர் – அ.டேவிட்
மாநகர செயலாளர் – செ.தமிழ்ச்செல்வன்
மாநகர இணை செயலாளர் – இரா.வீரக் குமார்
மாநகர துணை செயலாளர் – இராஇள வரசன்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *