பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.1.4 லட்சம் கோடி; நீட் பயிற்சிக்கு மக்கள் செலவு ரூ.1.32 லட்சம் கோடி: ராகுல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 24 ஒரு நிதியாண்டில் ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்குவதற்கு நிகராக பெற்றோர்கள் நீட் தேர்வு பயிற்சிக்கு செலவிடும் தொகை இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்றி ருக்கும் நிலையில், பல்வேறு தரவுகளுடன் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுடில்லியில் செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்கு ஒன்றிய அரசு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கு கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், ஒரே ஒரு தேர்வுக்காக, நாட்டில் ஒட்டுமொத்த மக்கள் நீட் தேர்வு பயிற்சிக்காக ரூ.1.32 லட்சம் கோடி செலவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ராகுல் வெளியிட்டார்.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். ஒட்டுமொத்தமாக மாண வர்கள் நீட் பயிற்சிக்கு செலவிடும் தொகையில் சராசரி எடுத்தால், ஒரு மாணவர் செலவிடும் தொகை ரூ.6 லட்சமாக உள்ளது. மக்களிடமிருந்து வரி வசூலித்து, ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடுவதற்கு நிகராக, ஒரே ஒரு தேர்வுக்காக, தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் செலவிடும் தொகை இருக்கிறது நம் நாட்டில். இது முழுக்க முழுக்க திருட்டு. வேறு எதுவும் இல்லை. இதையெல்லாம் செய்துவிட்டு, கடைசியாக, வினாத்தாள் கசிந்துவிட்டது, தேர்வு ரத்து என்று சொல்கிறீர்கள்.

இதனால்தான், வெளியே இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய இளைஞர்களின் எதிர்காலம் மோசமாக உள்ளது, படித்து முடித்த பிறகும், வேலை வாய்ப்புக்கான கதவுகள் மூடப்படுகின்றன. உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. புத்தாக்க தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. எனவே, இளைஞர்களுக்கு வேலை இல்லை. அத னால்தான் அவர்கள் போராடுகிறார்கள் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *