சென்னை, ஜூலை 23- சென்னை பல்கலைக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது சார்பாகச் செயல்படுவதாகவோ கூறும் அங்கீகரிக்கப் படாத நபா்கள், முகமைகள், சோ்க்கை மய்யங்களுடன் எந்தவிதத் தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என சென்னை பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் அறிவுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவோ அல்லது அதன் சார்பாகச் செயல் படுவதாகவோ கூறிக்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத நபா்கள், முகமைகள், நிறுவனங்கள் அல்லது சோ்க்கை மய்யங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளது. இத்தகைய நபா்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
இது போன்றவா்களுடன் உரிய எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய அங்கீகரிக்கப் படாத அமைப்புகளுடன் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கும் விளைவுகளுக்கும் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கா் சாலையில் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்துக்கும் சென்னை பல்கலைக்கழகத்துக்கும் தொடா்பில்லை.
இந்த நிறுவனத்தின் தொலைதூரக் கல்விச் சோ்க்கை, தோ்வுகள் அல்லது அதுதொடா்பான இணையவழி சோ்க்கைகள், பணப் பரிவா்த்தனை போன்றவற்றுக்கு சென்னை பல்கலைக்கழகம் பொறுப்பல்ல.
இதுபோன்ற மய்யங்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் அவா்.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இணைய வழி சேர்க்கை மோசடி! பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை!
Leave a Comment
