கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

23.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது, நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது திமுகதான். ‘பா.ஜ.க.வைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* ‘ஜந்தர் மந்தரில் தான் பேச்சுவார்த்தை’ – ஜே.பி.நட்டா அழைப்பை நிராகரித்த சிஜேபி திட்டவட்டம். ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகி சவுரவ் தாஸ் நிராகரித்தார். மேலும், “இனி எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ஜந்தர் மந்தரில் உள்ள மக்கள் மன்றத்தில் மட்டுமே நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.

* காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சுக்கு நிலைகுலையாமல் டில்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்; 3ஆவது நாளாக படை படையாக திரண்டு வந்த இளைஞர்கள்: கூடுதலாக காவல் துறையினர், துணை ராணுவப் படை குவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* நீட் (NEET) வினாத்தாள் கசிவு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்; தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தி இந்து

* ‘எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்’: ‘காவல்துறை வன்முறை’ தொடர்பான விவகாரத்தை விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு. தலைநகரில் ஜூலை 20 அன்று மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறையின் போது காவல்துறை வரம்பு மீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தை, தாமாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு.

* நரேந்திர மோடி “நாடாளுமன்றத்தில் பேச மறுப்பதால்”, பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் எதிர்க் கட்சிகளுக்கு ஏற்பட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பேட்டி. “மாணவர்கள் தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமரால் பேச முடிகிறது என்றால், ஏன் அவரால் நாடாளுமன்றத்திற்குள் அறிக்கை அளிக்க முடியவில்லை?” என கேள்வி

* சிஜேபி (CJP) பேரணியின் போது காவல்துறை நடவடிக்கை குறித்து அரசு பதிலளிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு. இந்தக் குற்றச்சாட்டுகளை ‘தனிப்பட்ட சம்பவங்கள்’ என்று ஒதுக்கிவிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது; மேலும் சிசிடிவி மற்றும் காணொலிப் பதிவுகளைப் பாது காத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தி டெலிகிராப்

* சிவசேனா (UBT) இணைப்பு அங்கீகாரம் தொடர்பான மனுவில் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். பிரிந்து சென்ற உறுப்பினர்களின் இணைப்பை அங்கீகரித்த உத்தரவில் பேரவைத் தலைவரின் கையெழுத்து இல்லை என்பதையும், இதில் அரசியலமைப்புச் சிக்கல்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி அம்மனு கேள்வி எழுப்புகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா

* சட்டவிரோத கட்சித் தாவல்கள் மற்றும் இணைப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விளக்கத்தை கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் மனு தாக்கல்

* ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதி தர வேண்டும். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என சோனம் வாங்சுக் நிபந்தனை. தனது நிபந்தனைகளை நிறை வேற்றினால் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடத் தயார் என சோனம் வாங்சுக் உறுதி.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *