மருத்துவக் கல்விக்கு தகுதி பெறுவ தற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (23.7.2026) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
