கோவை,ஜூலை 22– கோவை கழக மாவட்டத் தின் மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 24.6.26 அன்று கோவை சுந்தராபுரத்தில் மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் இல்லத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட மகளிர் அணித் தலைவர் முத்துமணி தலைமை தாங்கினார்.
கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்த கோவை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கலைச்செல்வி அனை வரையும் வரவேற்று உரை யாற்றினார்.
கோவை மாவட்ட கழகத் தலைவர் சந்திரசேகரன், கழக சொற்பொழிவாளர் புலியகுளம் வீரமணி மற்றும் கழகத் தோழர்கள் உரையாற்றினார்கள்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை மகளிர் தோழர்களும், நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடர் கழகத்தின் பங்களிப்பு குறித்தும் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு மிகப்பெரிய வாகனப் பிரச்சாரம் நடத்திய தமிழர் தலைவர் அவர்களின் ஓயாத பயணங்களை நினைவு கூர்ந்தும் உரை யாற்றினர்.
மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.
திராவிடர் கழகம் என்பது ஒரு தேர்தல் அரசியலின் வெற்றி தோல்வியில் முடங்கி விடுகின்ற இயக்கமல்ல.
திராவிடர் கழகத்தின் அடிப்படை பணியான ஜாதி ஒழிப்புப் பணியில் களத்தில் தொடர்ந்து போராடும், என்றும் தமிழர் தலைவர் அவர்கள் எண்ணப்படி இளைய தலைமுறை சார்ந்த புதிய மகளிர் தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது சிறப்பானது என்றும் பாராட்டி பேசினார்.
தலைமை பொறுப் பேற்ற தோழர் முத்துமணி தமிழர் தலைவர் அவர்கள் இவ்வளவு கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டும், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்து விட்டது. என்றாலும் தமிழர் தலைவர் அவர்கள் நம்மை தொடர்ந்து இயக்க செயல்பாடுகளோடு வலிமையாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவர் காட்டுகின்ற திசையில் மகளிர் தோழர்கள் எப்பொழுதும் பயணிக்க தயார் என்று கூறினார்கள்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் தோழர்கள்:
இளமதி செழியன், சுஜிதா கார்த்திகேயன், ராஜேஸ் வரி சிற்றரசு, தி.ச.யாழினி, தா.கயல்விழி, வி.சாவித்திரி, ஜி.நிர்மலா தேவி, பி.தமிழ்ச்செல்வி, கி.கவிதா, நாகமணி, ச.திலகமணி, விஜயலட்சுமி, தேன்மொழி,
தோழர்கள் இரா கணேசன், தி.க.வெங்கிடு, வே.தமிழ்முரசு, அ.மு.ராஜா, ஆவின் சுப் பையா, இள.கிருஷ்ண மூர்த்தி, ஆ பிரபாகரன், அ.சக்தி, சா.சிவகுமார், பழ.அன்பரசு, அக்ரி ஆ.நாக ராஜன், பா.கார்த்திகேயன் சுஜிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
