கன்னியாகுமரி தேநீர்க் கடைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம்

1 Min Read

கன்னியாகுமரி, ஜூலை 22- மக்களிடம் பரவி உள்ள மூடநம் பிக்கைகளை அகற்றி அவர் களுக்கு தன்னம்பிக்கையும் பகுத்தறிவு விழிப்புணர் வையும் உருவாக்க குமரி மாவட்ட திராவிடர் கழகம் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேநீர் கடைகளில் பொது மக்களை சந்தித்து அவர்களிடம் பேசி பகுத்தறிவு விழிப்புணர்வு சிந்தனைகளை கழகத் தோழர்கள் எடுத்துரைத்து நூல்களாகவும் துண்டறிக் கைகளாகவும் வழங்கி வருகின்றனர்.

குமரி மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியினை மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் ம. தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மு.ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் டாக்டர் பி.கலைச்செல்வன், கோட்டார் பகுதி கழத் தலைவர் ச.ச.மணிமேகலை, கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராஜன், கன்னியாகுமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், திராவிடர் கழக வடசேரி பகுதி தலைவர் பா.சு.முத்து வைரவன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *