நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 22 நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்த ரத் தீர்வை அளிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்!

‘நீட்’ தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் (20.7.2026) நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இந்தச் சம்ப வத்தை கண்டித்தும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

சென்னை எழும்பூரில்…

இதற்கிடையே டில்லியில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற மாண வர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி. கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு (21.7.2026) பேரணி நடத்தினார்கள். பேரணி முடி வில் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:

* புதுடில்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.

* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

* நீட் ஏற்படுத்தும் ஆபத்து களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது திமுக.

* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த போராட்டங்களின் மய்யப் பொரு ளாக அமைய வேண்டும்.

* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *