விழுப்புரம்: எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

நினைவில் வாழக்கூடிய அருமைத் தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் த.தண்டபாணி – சரோஜா அவர்களின் குடும்பம், தந்தை பெரியார் கொள்கையை வழுவாமல் பின்பற்றி வரக்கூடிய ஒரு குடும்பம்!
கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!
என்னுடைய தலைமையில், இந்தக் குடும்பத்தில் நடப்பது ஆறாவது திருமணமாகும்!

விழுப்புரம், ஜூலை 22   நினைவில் வாழக்கூடிய அருமைத் தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் த.தண்டபாணி – சரோஜா அவர்களின் குடும்பம், தந்தை பெரியார் கொள்கையை வழுவாமல் பின்பற்றி வரக்கூடிய ஒரு குடும்பம்! கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! என்னு டைய தலைமையில், இந்தக் குடும்பத்தில் நடப்பது ஆறாவது திருமணமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
நினைவில் வாழக்கூடிய அருமைத் தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் த.தண்டபாணி – சரோஜா அவர்களின் குடும்பம், தந்தை பெரியார் கொள்கையை வழுவாமல் பின்பற்றி வரக்கூடிய ஒரு குடும்பம்! கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! என்னுடைய தலைமையில், இந்தக் குடும்பத்தில் நடப்பது ஆறாவது திருமணமாகும்!மணமக்கள் எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதிசுடரொளிகள் அய்யா நல்லாசிரியர் த.தண்டபாணி– சரோஜாதந்தை பெரியார் கொள்கையை வழுவாமல் பின்பற்றி வரக்கூடிய ஒரு குடும்பம்!எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமிஉழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கடலூர் என்.டி.கோவிந்தசாமிஎன்னுடைய தலைமையில், இந்தக் குடும்பத்தில் நடப்பது ஆறாவது திருமணமாகும்!இந்தக் கொள்கையைப் பின்பற்றியவர்கள், வளருவார்களே தவிர, யாரும் தேய்ந்துவிட மாட்டார்கள், வீழ்ந்துவிட மாட்டார்கள்!ஒரு நல்ல குடும்பம், பல்கலைக் கழகம்!சுயமரியாதைத் திருமண முறையை தந்தை பெரியார்தான் உருவாக்கினார்!தமிழில் பேசுகிறோம்; நம்முடைய தாய் மொழியில் பேசுகிறோம்!

மணமக்கள் எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி

கடந்த 9.7.2026 அன்று விழுப்புரத்தில் மணமக்கள் எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

சுடரொளிகள் அய்யா நல்லாசிரியர்
த.தண்டபாணி– சரோஜா

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் எஸ்.ஆர். நெடுஞ்செழியன் – திவ்ய பாரதி ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கவும், அதன் மூலமாக சுயமரியாதைச் சுடரொளிகள் அய்யா நல்லாசிரியர் த.தண்டபாணி– சரோஜா ஆகிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள். என்றைக்கும் மறக்க முடியாத கொள்கைக் குடும்பத்தி னுடைய உறவுகள், எங்கள் உறவுகள். அப்படிப்பட்ட அந்தக் குடும்பத்தினுடைய எல்லா தோழர்களையும், உறவுகளையும் இந்த மணவிழா வாய்ப்பை வைத்துக் கொண்டு மீண்டும் பார்க்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த வாழ்க்கை இணையேற்பு விழா – நினைவில் வாழக்கூடிய அருமைத் தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் த.தண்டபாணி – சரோஜா அவர்கள் வழிப் பெயரனும்,  ஆசிரியர் எல்.ரவிச்சந்திரன்  – ஆசிரியர் டி.செல்வகுமாரி ஆகியோருடைய செல்வனு மான எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் அவர்களுக்கும், தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை திருவாளர்கள் ஆர்.சிவசுப்பிரமணியன் – எஸ்.பத்மா ஆகியோருடைய செல்வி எஸ்.திவ்யாபாரதி அவர்களுக்கும் நடை பெறக்கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் கொள்கையை வழுவாமல் பின்பற்றி வரக்கூடிய ஒரு குடும்பம்!

இந்த மணவிழாவிலே எங்களைப் போன்றவர்கள் கலந்து கொள்வது என்பது ஒரு நிகழ்ச்சி அல்ல; ஒரு முக்கியமான கடமையாகும். அதுவும் உறவுக்காரர்கள், நெருக்கமான உறவுக்காரர்கள் தண்டபாணி – சரோஜா ஆகியோருடைய குடும்பம் என்ற அந்த ஆலம் வேர்கள், அந்த வேர்களுடைய விழுதுகள் எல்லாம் இங்கே பரந்துபட்டு இருக்கின்றன. எனவே, இந்த மணவிழாவிலே அவர்கள் காலத்திலிருந்தே தந்தை பெரியார் கொள்கையை வழுவாமல் பின்பற்றி வரக்கூடிய ஒரு குடும்பம், இந்த குடும்பம். உதாரணமாக, வந்திருக்கிறவர்களுக்கும்,  மற்ற பொறுப்பாளர்களுக்கும் புதிராகிறார். இன்றைக்கு ஏதோ, யார் எந்தக் கட்சிக்குப் போனாலும் செல்வாக்கு என்றெல்லாம் கருதக்கூடிய ஒரு காலகட்டத்திலே, எதைப் பற்றியும் கவலைப்படாமல், இரண்டு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். அப்போதெல்லாம் இந்தக் கொள்கையை சொல்வதற்கு, இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்காத காலம். அந்தக் காலத்திலே அய்யா தண்டபாணி அவர்களும், அம்மா சரோஜா அவர்களும் மிகப்பெரிய அளவுக்குத் தீர்க்கமான பெரியார் தொண்டர்கள்.

எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள்,
கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!

இந்தக் கொள்கைக்காக அவர்கள் எதை வேண்டு மானாலும் விட்டுக் கொடுப்பார்கள், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நெருக்கமான குடும்பமாகும். தந்தை பெரியாருக்கு பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை தாங்கிய பிறகும், அதற்குப் பிறகும் எங்களை போன்றவர்கள் நெருக்கமாக இருக்கிற நிலையிலும், இந்தக் குடும்பம் எங்கள் குடும்பம், நம்முடைய குடும்பம் என்ற அந்த உரிமையோடும், உறவோடும் இந்த மணவிழாவை நாங்கள் நடத்தி வைக்க இருக்கிறோம்.

இதில் ஒரு பெரிய ஆச்சரியம், சில திருமணங்களில், மணமகன் அறிமுகமானவராக இருப்பார். அவர்கள் வீட்டுத் திருமணம். மணமகள் குடும்பம் புதிதாக இருக்கக் கூடியதாக இருக்கும். அதே மாதிரி இப்படியும் இருக்கலாம். மணமகள் அறிமுகமானவராக இருப்பார். மணமகன் குடும்பம் புதிதாக இருக்கும்.

ஆனால், இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், இந்த மணமக்கள் இரண்டு பேரும் எங்களுக்கு வேண்டிய குடும்பங்கள். இரண்டு குடும்பமும் அறிமுகமான குடும்பம். அதைத்தான் மூர்த்தி அவர்கள் இங்கே சொன்னார். அதிலும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் யார் என்றால்,  நம்முடைய மணமகள் திவ்ய பாரதியினுடைய பெற்றோர்கள்தான். ஏனென்று கேட்டால், எங்களை விட, அவர்கள் இந்த மணமுறைக்கு வந்திருக்கிறார்கள். துபாய் மூர்த்தி அவர்கள் இங்கே உரையாற்றும்போது ஒரு நிகழ்வைச் சொன்னார்கள்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி

அவருக்கு ஜாதி உணர்ச்சி என்பதெல்லாம் கிடை யாது. அதற்கு அப்பாற்பட்டவர். திராவிட இயக்கத்தவர். இருந்தாலும் ஓர் அடையாளத்துக்காகச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்னார். அம்மா சத்திரம், இந்த அம்மா சத்திரத்திற்கே ஒரு பெரிய பெயர் என்னவென்றால், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்கள் மூலமாகத்தான் வந்திருக்கிறோம். அங்கேதான் சிலை எழுப்பினோம். கல்யாணி அவர்கள், அவர் இந்த ஜாதியைச் சார்ந்தவர் அல்ல; காதல் திருமணம், கலப்புத் திருமணம், கலையின் மூலமாக உருவான திருமணம். அப்படிப்பட்ட அவர்கள் சொன்னதைப்பற்றிச் சொன்னார்.   கே.ஆர்.ராமசாமி அவர்கள் நடிப்பிசைப் புலவர் மட்டுமல்ல. எந்தவிதமான கைமாறு கருதாதவர்.

அண்ணாவுக்கு ஒரு பாதுகாவலர் போல இருந்து கொண்டு, தன்னுடைய பொருள் முழுதும் இந்த இயக்கத்திற்குச் செலவழித்த ஒரு மாபெரும் வள்ளல்  நடிப்பிசை புலவர் அவர்கள். இயக்கத்துக்கு அவர் கொடுத்திருப்பார்; இயக்கத்திலிருந்து எதையும் அவர் எதிர்பார்த்தவரே அல்ல. இப்படி சில பேரைப் பார்ப்பது என்பது இருக்கிறதே, அது அரிதினும் அரிது.

எனவே, அந்த ஊரைச் சார்ந்த, அந்தக் குடும்பங்களைச் சார்ந்தவர்தான் மணமகள்

அதேமாதிரி தண்டபாணி அவர்கள். தண்டபாணி அவர்களுடைய இந்தக் குடும்பம், பேரப்பிள்ளைகள், இவர்களுடைய வாழ்க்கை என்பதுதான் மிக முக்கியமாக இருக்கக்கூடியதாகும். புதிதாக வந்தவர்களுக்காக சொல்கிறேன். இம்மணவிழாவிற்காக பல மாதங்களுக்கு முன்பே இந்தத் தேதியைக் கேட்டு வாங்கினார்கள். இதற்காகவே என்னுடைய மற்ற சுற்றுப்பயணங்களை எல்லாம் கூட தள்ளி வைத்தேன். வெளிநாட்டுக்குப் போக வேண்டிய அவசியம் இருந்தது. என்னுடைய வாழ்விணையரை முதலில், போகச் சொன்னேன். நான் இந்த மணவிழாவினை முடித்துவிட்டு வருகி றேன் என்றேன். ‘‘என்னுடைய வாழ்த்துகளை மண மக்களுக்குச் சொல்லிவிடுங்கள்’’ என்று அம்மா அவர்கள் சொன்னார்கள்.

உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த
கடலூர் என்.டி.கோவிந்தசாமி

ஏனென்றால், எங்கள் எல்லோருக்கும் மிக முக்கிய மான குடும்பம் இது. தண்டபாணி – சரோஜா அம்மையார் இரண்டு பேரும் ஆசிரியர்கள்.  முதன் முதலில் விக்கிர வாண்டி தொகுதியில் 1952 ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர் யார் என்றால், உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கடலூர் என்.டி.கோவிந்தசாமி அப்பொழுது வெற்றி பெற்றவர்கள் எல்லாம், ராஜினாமா செய்துவிட்டு, இன்னொரு கட்சிக்குப் போகமாட்டார்கள். பதவி கிடைக்குதே என்று. ஆனால், முழுக்க முழுக்க அவர் சாதாரண ஏழை, எளிய நிலையில் இருக்கக் கூடியவர். அவருடைய வெற்றிக்கு எல்லோரும் பாடுபட்டார்கள்.

என்னுடைய தலைமையில், இந்தக் குடும்பத்தில் நடப்பது ஆறாவது திருமணமாகும்!

ஏ.கோவிந்தசாமி விக்கிரவாண்டி தொகுதி
எம்.எல்.ஏ. அவருக்கெல்லாம் செலவே கிடையாது. அவர்களுக்கெல்லாம் நம்முடைய தோழர்கள் தேர்தல் நிதி கொடுப்பார்கள். அய்யா, நாங்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்து, வெற்றி பெற்றவர்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி. அப்படிப்பட்ட அவருடைய தலைமையிலே, அய்யா தண்டபாணிக்குத் திருமணம். அதற்கடுத்து எல்லாமே பார்த்தீர்கள் என்றால், அய்யாவுக்கு பிறகு, அன்னை மணியம்மையார், அப்படிப்பட்ட அந்த திருமணங்கள் எல்லாம் நடந்தது, மிக முக்கியம் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கிற, இன்னுங்கேட்டால், எங்கள் குடும்பத்திலே ஒரு உறுப்பினர் மாதிரிதான்  அந்தப் பிள்ளை செல்வி அவர்கள். அவர் படித்தது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில். பிறகு புதுச்சேரியில் வேலை பார்த்தார் என்பதெல்லாம் இன்னமும் எனக்கு பசுமையான நினைவுகளாக இருக்கிறது.  இயற்கையின் கோணல் புத்தி, ஒரு நோய் காரணமாக அவர் நம்மைவிட்டுப் பிரிய நேர்ந்தது. பெரிய பெரிய பதவிக்கு வந்திருக்க வேண்டியவர். அவர்  இல்லை என்பது வருத்தமான ஒரு செய்தி என்றாலும், பிள்ளைகள் அவருடைய வழியில் இருக்கிறார்கள். இந்தத் திருமணம் என்னுடைய தலைமையில், இந்த முறையில் நடப்பது ஆறாவது திருமணமாகும்.

முதல் முறை யோகமூர்த்தி – செல்வி திரு மணம். இரண்டாவது செல்வன் – காந்திமதி திருமணம். மூன்றாவது ரவிச்சந்திரன் – செல்வ குமாரி திருமணம். நான்காவது தியாகராஜன் – கவிதா திருமணம். அய்ந்தாது அரவிந்த் – ராதிகா திருமணம். அதற்கடுத்தது ஆறாவதாக இப்பொழுது நெடுஞ்செழியன் – திவ்யபாரதி திருமணமாகும்.

இதில் இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால், சுயமரியாதை இயக்கக் கொள்கையினால் திரு மணம் செய்து கொண்டவர்கள், ‘என்ன ஆகுமோ தெரிய வில்லையே’, சடங்குகள் இல்லை, சம்பிரதாயம் இல்லை’ அதனால் என்னாகுமோ தெரியவில்லையே’ என்று சிலர் நினைக்கலாம்.  எங்களுடைய பொதுச்செயலாளர் இங்கே சொன்னார், இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்கின்றவர்கள் நன்றாக இருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று.

இந்தக் கொள்கையைப் பின்பற்றியவர்கள், வளருவார்களே தவிர, யாரும் தேய்ந்துவிட மாட்டார்கள், வீழ்ந்துவிட மாட்டார்கள்!

இன்னுங்கேட்டால், ‘தம்மின் தம்மக்கள்’ அவர் ஆரம்பப் பள்ளிக்கூட  ஆசிரியர். இவர்கள் எல்லோரையும் பார்த்தீர்களேயானால், தலைமை ஆசிரியர், ஆய்வாளர், மணமக்கள் இரண்டு பேரையும் பார்த்தீர்களேயானால், படித்தவர்கள். பெங்களூருவில் கணினிப் பொறியாளர்களாகப் பணியாற்றக் கூடியவர்கள். இப்படி இந்தக் குடும்பம் வளர்ந்திருக்கிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றியவர்கள், வளருவார்களே தவிர, யாரும் தேய்ந்துவிட மாட்டார்கள், வீழ்ந்துவிட மாட்டார்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அருமையான மணவிழாவை நடத்தி வைப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு நல்ல குடும்பம், பல்கலைக் கழகம்!

அதிலும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த மணவிழாவில் பார்க்கிறீர்கள், நம்முடைய பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளுக்கு நான் சொல்கிறேன், தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம், திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம் வந்திருக்காவிட்டால், இத்தனைப் பெண் குழந்தைகள் படித்து, ஆசிரியர்களாகி, அவருடைய பிள்ளைகள் வாழையடி வாழையாக என்று சொல்வதைவிட, ஆலமரத்து வேர், பரந்து விரிந்த ஆலமரம் – அதனுடைய பலமான விழுதுகள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் சுயமரியாதை, பகுத்தறிவு, தன்னம்பிக்கை, மூடநம்பிக்கைக்கு எதிராக இருக்கக்கூடிய தைரியம், துணிச்சல். இவை அவர்களை எல்லாம் உருவாக்கிக் காட்டி இருக்கிறது. ஆகவே,  ஒரு நல்ல குடும்பம், ஒரு பல்கலை கழகம் என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள். இது நல்ல குடும்பம் மட்டுமல்ல ஒரு கொள்கைப் பல்கலைக்கழகம் என்பதை நான் மகிழ்ச்சியோடும், பெருமையோடும், இந்தக் கொள்கையினுடைய வெற்றியைப் பொருத்தும் எடுத்துச் சொல்லுகிறேன். ஆகவே, அப்படிப்பட்ட இந்தக் குடும்பத்தினுடைய மணவிழாவை செல்வர்கள் நெடுஞ்செழியன் – திவ்யபாரதி ஆகியோருடைய வாழ்க்கை இணைேயற்பு விழாவை நடத்துவதற்கு முன்பு ஒரு சில கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன்.

சுயமரியாதைத் திருமண முறையை
தந்தை பெரியார்தான் உருவாக்கினார்!

இந்த மணவிழா ஏன் சுயமரியாதைத் திருமணமாக நடைபெறவேண்டும்? ‘‘சுயமரியாதைத் திருமணம் தத்துவமும், வரலாறும்’’ என்ற பெரிய புத்தகம் எப்படி உருவாயிற்று?  இந்த 100 ஆண்டு காலத்தில் 98 ஆண்டுகள் நடைபெறும் இந்த சுயமரியாதைத் திருமணங்களை, தந்தை பெரியார்தான் உருவாக்கினார். ஒரு நூற்றாண்டில், பல நூற்றாண்டுகளாக இருந்த மூடநம்பிக்கையை மாற்றி, பெண்ணடிமையை மாற்றி, ஒரு புதிய சமூகம், புதிய சிந்தனையை உருவாக்கக்கூடிய அளவில் இருக்கிறது.

தமிழில் பேசுகிறோம்;
நம்முடைய தாய் மொழியில் பேசுகிறோம்!

சுயமரியாதைத் திருமணம், புரோகித திருமணத்திற்கு எதிரானது, வைதிகத் திருமணத்திற்கு எதிரானது, மூடச் சடங்குகளுக்கு எல்லாம் எதிரானது. எங்களுக்கு யார் மீதும் தனிப்பட்ட முறையில், அய்யர் மேல் ஒன்றும் கோபம் கிடையாது. தனிப்பட்ட முறையில், எந்த வைதீக உணர்வு படைத்தவர்கள் மீதும் எங்களுக்குக் கோபம் கிடையாது. உதாரணம் சொல்கிறேன், இரண்டு பேர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். மணமக்கள் நெடுஞ்செழியன், மணமகள்  திவ்ய பாரதி ஆகியோர் மகிழ்ச்சிகரமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், இதுவே புரோகித, வைதீகத் திருமணமாக இருந்திருந்தால்,  மாஞ்சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி, நெருப்பு எரிய, சுற்றி வரவேண்டும். அதுவும் நெருப்பு சரியாக எரியாமல்,  புகை அடிக்கும்.  அந்தப் புகை தாங்க முடியாமல்,  மணமக்களும் கண்களைக் கசக்குவர். அந்த அய்யர் மந்திரம் சொல்லிக்கொண்டே இருப்பார். இப்பொழுது நான் பேசுகிறேன், இந்தக் கருத்துகள் பல பேருக்குப் பிடிக்கும்; சில பேருக்குப் பிடிக்காது. ஆனால், அதைப்பற்றிக்  கவலையில்லை.  உங்களுக்கு, நான் என்ன பேசுகிறேன் என்பது புரிகிறது. ஏனென்றால், தமிழில் பேசுகிறோம். நம்முடைய தாய் மொழியில் பேசுகிறோம். ‘மணமக்கள் வாழ்க’ என்று தமிழில் சொல்கிறோம். இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறது. ஆனால், அய்யரைக் கூப்பிட்டு, காலில் விழச் சொல்லி, மந்திரம் சொல்லி, சுற்றி வருகிறீர்களே, அந்த மந்திரம் என்னவென்று உங்களுக்குப் புரியுமா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *