நீதிகட்சியைத் தந்தை பெரியார் ஆதரித்தவுடன், சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர்கள்,
‘‘என்ன பணக்காரர்களை ஆதரிக்கிறார்? அவர், ஏழைகளை எல்லாம் விட்டுவிட்டாரே, இனிமே சமதர்மம்பற்றி பேச மாட்டார்’’ என்றனர்!
‘‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை; நான் கொண்டு வந்த தீர்மானம்தான், அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது!’’
‘‘என்ன பணக்காரர்களை ஆதரிக்கிறார்? அவர், ஏழைகளை எல்லாம் விட்டுவிட்டாரே, இனிமே சமதர்மம்பற்றி பேச மாட்டார்’’ என்றனர்!
‘‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை; நான் கொண்டு வந்த தீர்மானம்தான், அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது!’’
சென்னை, ஜூன் 24 நீதிக் கட்சியைத் தந்தை பெரியார் ஆதரித்தவுடன், சுயமரியாதை இயக்கத்தில் இருந்த வர்கள், ‘‘என்ன பணக்காரர்களை ஆதரிக்கிறார்? அவர், ஏழைகளை எல்லாம் விட்டுவிட்டாரே, இனிமே சமதர்மம்பற்றி பேச மாட்டார் அவர்’’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், அய்யா அவர்கள் சொல்கிறார், ‘‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை. நான் கொண்டு வந்த தீர்மானம்தான், அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது’’ என்று அய்யா சொல்லியதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3)
்கடந்த 22.6.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
உலகப் புகழ் பெற்ற இரட்டையர்களில் ஒருவர் சர்.ஏ. ராமசாமி முதலியார்
நீதிக் கட்சி ஆட்சியின்மீது பொய் பிரச்சா ரம் செய்து அவ்வாட்சியை ஒழித்தனர். அதற்கு ஒரு சின்ன உதாரணம் கூறுகிறேன். சர்.ஏ.ராமசாமி முதலியார் உலகப் புகழ் பெற்ற இரட்டையர்களில் ஒருவர். எக்ஸிக்யூட்டிவ் மெம்பர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவருக்கு வெள்ளைக்கார அரசாங்கத்தில் பதவி கொடுத்தார்கள். ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். நிர்வாகத் திறமையில் சிறந்தவர். அப்படிப்பட்ட சர்.ஏ. ராமசாமி முதலியார் 1937 இல், தேர்தலில் நிற்கிறார். தேர்தலுடைய குணாதிசயம் வித்தியாசமானதாகும். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அதைப்பற்றி மக்களுக்குக் கவலையில்லை. இது இன்றைக்கு ஏற்படவில்லை. அன்றையில் இருந்தே இருக்கக்கூடிய உடன் பிறந்த ஒரு கூறு – தேர்தலு டைய கூறு – ஜனநாயகத்தினுடைய ஒரு கூறு.
உடனே சத்தியமூர்த்திகள் என்ன செய்தார்கள்? சாதாரண மக்கள் மத்தியில், பெண்கள் மத்தியில் பெரிய அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்கள். அப்போது நான் சிறிய பிள்ளையாக இருந்தேன். அதுபற்றி அய்யாவிடமே இந்த சந்தேகத்தைக் கேட்டுள்ளேன். ‘விடுதலை’யில் ஆசிரியர் குருசாமி எழுதுவார், அதைப் படித்துத்தான் நான் தெரிந்து கொண்டேன், ‘விடுதலை’ வாசகர் என்ற முறையில்.
பார்ப்பன ஆதிக்கவாதிகளின்
அன்றைய பிரச்சாரம்!
அன்றைய பிரச்சாரம்!
‘தாலி அறுத்த ராமசாமி முதலியாருக்கா உங்கள் ஓட்டு? போடுங்கள் மங்களகரமான மஞ்சள் பெட்டியிலே உங்கள் ஓட்டை!’ இப்படித்தான் காங்கிரஸ் என்கிற பெயராலே பார்ப்பன ஆதிக்கவாதிகள் அன்று பிரச்சாரம் செய்தனர்.
இப்படி எல்லாம் அன்று ஏமாற்றிப் பிரச்சாரம் செய்தார்கள் என்று நம்முடைய ஆசிரியர் குருசாமி அவர்கள் ‘விடுதலை’ தலையங்கத்தில் எழுதுவார். அதையெல்லாம் மாணவப் பருவத்தில் படித்திருக்கி றேன்.
ஒருமுறை, நான் அய்யாவிடம் கேட்டேன், ‘‘அது என்னங்கய்யா ‘தாலி அறுத்த ராமசாமி முதலியாருக்கா உங்கள் ஓட்டு?’ என்று சொல்கிறார்களே’’ என்று.
அதுவா, சொல்கிறேன் என்று, அதற்குரிய விளக்கத்தைச் சொன்னார்.
கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களைக் கைது செய்கிற பழக்கம் உண்டு!
சென்னை மாகாணத்தில், சர்.ஏ.இராமசாமி முதலியார் ஒரு நிர்வாக உறுப்பினராக இருக்கிறார். அவருடைய பதவிக் காலம் முடிந்ததும், தேர்தலில் மறுபடியும் நிற்கிறார். கன்னட பகுதிகள் கொல்லேகால், மலையாள பகுதியில் ஒரு பகுதியெல்லாம்சேர்ந்ததுதான் சென்னை மாகாணம் –பிரசிடென்சி. அதில் ஒரு வழக்கு வருகிறது. அந்த வழக்கில், கடனுக்காக ஜப்தி செய்கிறார்கள். அந்தக் காலத்தில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களைக் கைது செய்கிற பழக்கம் உண்டு. ‘சிவில் அரஸ்ட்’ என்பார்கள். அதற்குப் ‘பேட்டா கட்டுவது’ என்று உண்டு. யார் வழக்குப் போட்டார்களோ, அவர்களே பணம் கட்டுவார்கள். இப்பொழுது அந்த முறை கிடையாது. ஒரு அம்மா வரவில்லை என்றவுடன், உடனே அந்தப் பெண்ணைக் கைது செய்து கொண்டுவாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். ‘சிவில் அரஸ்ட்’ வாரண்ட் கொடுத்து, அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அந்த அம்மா நீதிமன்றத்தில் நிற்கிறார்; கழுத்தில் தாலி அணிந்திருக்கிறார். வெள்ளைக்கார நீதிபதி கேட்கிறார், ‘லா மெம்பர் யார்?’ என்று. ‘ராமசாமி முதலியார்’ என்கிறார் அந்த அம்மையார்.
அந்த அம்மையாரைப் பார்த்து, ‘ஏன், உன்னிடம் எந்த சொத்தும் இல்லையா? அதை அட்டாச் செய்யலாமே?’ என்று நீதிபதி கேட்கிறார்.
‘அவர்களிடம் கையகப்படுத்துவதற்கு ஒன்னும் இல்லீங்க’ என்று சொல்கிறார்கள்.
வெள்ளைக்கார நீதிபதிக்குத்
தாலி என்றால் தெரியாது!
தாலி என்றால் தெரியாது!
‘‘அப்படியா?’’ என்று நீதிபதி சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். அந்த அம்மாவின் கழுத்தில் தாலி தெரிகிறது. ‘வாட் இஸ் தட் ஜுவல்’ என்று கேட்கிறார் நீதிபதி. வெள்ளைக்கார நீதிபதிக்குத் தாலி என்றால் தெரியாது.
உடனே நீதிபதி, ‘கழுத்தில் அந்த நகை இருக்கிறது அல்லவா, 50 ரூபாய்தானே கடன் வாங்கியிருக்கிறார் அந்த அம்மா, அதற்காக அதை ஜப்தி செய்யுங்கள்’ என்றார்.
பிறகு, நீதிபதி ‘கரெக்ட் செய்துகொண்டார்.’ பிறகு, ‘தாலி என்பதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று வருத்தம் தெரிவித்தார் அந்த நீதிபதி.
இந்த நிகழ்வை, தேர்லில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மிகவும் கீழிறங்கிச் சென்று, விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.
‘தாலி அறுத்த ராமசாமி முதலியார்’ என்று பிரச்சாரம் செய்தார்கள்!
அவையெல்லாவற்றையும் மறைத்துவிட்டு, முழுக்க முழுக்க ‘தாலி அறுத்த ராமசாமி முதலி யார்’ என்று பிரச்சாரம் செய்தார்கள். ஏனென்றால், ராமசாமி முதலியார் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். தவறானப் பிரச்சாரத்தைத் திட்ட மிட்டு செய்தார்கள். ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை; ‘இஸ்டகிராம்’ அது.
அந்த நேரம், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் தந்தை பெரியார். அந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி, ராஜகோபலாச்சாரியார், மற்றவர்கள் பயன்படுத்தி னார்கள். இப்படி எல்லாம் தவறாகப் பிரச்சாரம் செய்து, சாதனைகள் செய்த நீதிக்கட்சி ஆட்சியை வேத னைக்குரியதாக தோற்கடித்தார்கள்.
‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில்…
‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில், 146 ஆவது பக்கத்தில் இருக்கிற செய்தி இது. அதைப் படிக்கிறேன் கேளுங்கள்:
‘‘இக்காலத்தில் நடைபெற்ற ஜில்லா போர்டு எல்லா தேர்தல்களிலும் காங்கிரஸுக்கே வெற்றி; அதனால் நகரசபை ஜில்லா போர்டு பஞ்சாயத்து சபை ஆகிய எல்லாவற்றையும் அவர்களே கைப்பற்றினர். காங்கிரசை எதிர்த்து நின்ற பெரிய மனிதர்கள் எல்லோரும் தோற்றனர். இதனால் பலர் பொதுவாழ்வே நமக்கு வேண்டாம் என்று விலகினர்; சிலர் காங்கிரசோடு கலந்து ஒன்றாயினர்.’’
‘‘காங்கிரஸ் வெற்றி பெற்றது என்றவுடன், அங்கே போய்விட்டார்கள்.’’ இன்றைக்குத்தான் இந்த வழக்கம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்த வியாதி நீண்ட நாள்களுக்கு முன்பே இருந்திருக்கிறது.
‘‘இந்த நிகழ்ச்சியைக் கண்டு, ஈ.வெ.ரா. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தம் கட்சியில் (ஜஸ்டிஸ் கட்சி) உள்ளவர்கள் எதிர்கட்சியில் சேர்வதைப் பற்றிக் கவலைப்படவில்லை.’’
இப்போது பலர் கட்சிவிட்டுக் கட்சி மாறுகிறார்கள். உத்தியோகம், பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தைச் சிலருக்குச் சமீபத்தில் நடந்த முட்டாள்தனமானத் தேர்தல் காட்டி விட்டது. யார் யாருக்குப் பதவிகள் வேண்டுமோ அவர்களும், பதவிகள் இல்லா விட்டால் யார் யாருக்கு மதிப்பும், மரியாதையும் இருக்காதோ அவர்களும். தங்களது வாழ்வுக்கு வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது அவசரத்தில் வேகமாகக் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள்.’’
ஜஸ்டிஸ் கட்சி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
‘‘இதைப் பற்றி நாம் வருந்துவதா? மகிழ்ச்சி அடைவதா? என்பது ஒரு பிரச்சினைதான். நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான் கிரமம் என்பது நமது அபிப்பிராயம். யார் யார் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தாலும், அவர்கள் பட்டம், பதவி பெற்று நிர்வாகம் நடத்தியதாலும், கட்சிக்குக் கெட்ட பெயரும், தேர்தலில் தோல்வியும் ஏற்படுவதற்குக் காரணஸ்தர்களாக இருந்தார்களோ, அவர்களை நாம் தள்ளுவதற்கு முடியாமல் இருக்கிற காலத்தில், அவர்களாக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஜஸ்டிஸ் கட்சி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?’’ என்றார் தந்தை பெரியார்.
‘‘காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி!’’
காமராஜரை, பெரியார் ஆதரிக்கிறார் என்றவுடன், அவர் மேல் ஆத்திரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆச்சாரியாரின் தூண்டுதலால், ஒரு புதிய கட்சியை, தேர்தல் நடைபெறுவதற்கு முன் தொடங்கினார்கள். இந்தத் தகவல் நிறைய பேருக்குத் தெரியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு துணைத் தலைவராக இருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ண ரெட்டியார் என்று பெயர். அதேபோன்று, சாத்தூர் ஜெயராம் ரெட்டியார் மிக முக்கியமானவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சியைத் தொடங்கினார்கள். அந்தக் கட்சிக்கு என்ன பெயர் என்றால், ‘காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி’ என்று பெயர் வைத்தார்கள்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜரிடம் கேட்டார்கள், ‘‘காங்கிரசுக்கு எதிராகப் புதுக் கட்சியை ஆரம்பித்திருக்காங்களே?’’ என்று.
‘அப்படியா?’ என்று கேட்டுவிட்டு, ‘என்ன பெயருங்க’ என்று அவருடைய மொழியில் கேட்டார்.
‘காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி’ என்று பெயர்.
‘அப்படியா? சரி, அவர்களெல்லாம் போய்விட்டார்கள் அல்லவா, காங்கிரஸ் சீர்திருந்திவிட்டது, அவ்வளவுதான்’ என்றார் காமராஜர்.
அதுபோன்று தந்தை பெரியாரின் சிந்தனை ஓட்டம் – பொது அறிவு. படிப்பறிவு போன்று ஓர் எல்லைக்குள் இருப்பது அல்ல.
மேலும் பெரியார் தொடர்கிறார்,
‘‘ஜஸ்டிஸ் கட்சி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? மற்றும் – நன்மை என்பதற்கு, நம்மைப் பிடித்த “பொல்லாத கிரகங்கள்” மாறிக் காங்கிரசைப் பற்றுகின்றன என்றால், நாம் இரண்டு விதத்தில் மகிழ்ச்சியடையக் கடமைப்பட்டிருக்கிறோம்; என்னவென்றால், ஒன்று நம்மைவிட்டுப் பிரிந்தது, மற்றொன்று இந்த உபத்திரவங்கள் நம் எதிரிகளைப் போய்ப் பற்றியது. இன்னும் சிலர் நம்மைவிட்டுப் போக வேண்டியவர்கள் நமக்குள்ளிருக்கிறார்கள். அவர்களும் போய் விடுவார்களானால், ஜஸ்டிஸ் கட்சிக்கு மிகவும் நன்மை செய்தவர்களாவதோடு, கட்சியின் நன்றிக்கும் பாத்திரமானவர்களாவார்கள்.
பழைய வீடுகள் வெந்தது போக,
மீதியாவது வேகாமல் இருக்கும்!
மீதியாவது வேகாமல் இருக்கும்!
இம்மாதிரியான குடியிருந்த வீட்டுக்குத் தீ வைத்துக் கொண்டிருக்கும் குணமுள்ள ஆட்களுக்கு, ஒரு போக்கிடமில்லாவிட்டால், சதா ஒரே வீடு வெந்து கொண்டேயிருக்கும். ஆகையால், அப்படிப்பட்டவர்கள் வேறு வீட்டுக்குப் போகச் சவுகரியமிருந்தால், பழைய வீடுகள் வெந்தது போக, மீதியாவது வேகாமல் இருக்கும். ஆகையால், இப்படிப்பட்ட ஆட்களுக்குப் புகலிடமாய் காங்கிரஸ் இருப்பது பற்றி, இதற்காகவும் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்த வேண்டியதும் கடமை ஆகும்.”
இது 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 25-இல் வெளியான ‘குடிஅரசு’வில் “கட்சி மாறுதல்” என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டதாகும். காங்கிரஸ்காரர்கள் பதவியேற்ற பின் சிறிது சிறிதாக அவர்களுடைய கொள்கைகள் மாறின;
தந்தை பெரியார் அவர்களுடைய இது மாதிரியான சிந்தனைகள், மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புள்ளவகளாக அமையும்.
அய்யா அவர்களுடைய சிந்தனைகளினுடைய கூர்மையைப் பற்றி நிறையச் சொல்லலாம்.
அதுமட்டுமல்ல, அய்யா அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேருகிறபோது, பலபேர் சொன்னார்கள், ‘‘கட்சியின் கொள்கையை மாற்றிவிட்டார்’’ என்றெல்லாம் சொன்னபோது, அய்யா தந்தை பெரியார் அவர்கள் தெளிவாகச் சொன்னார்.
‘‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை; நான் கொண்டு வந்த தீர்மானம்தான்,
அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது!’’
அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது!’’
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தவுடன், சுய மரியாதை இயக்கத்தில் இருந்தவர்கள், ‘‘என்ன பணக்காரர்களை ஆதரிக்கிறார்? அவர், ஏழைகளை எல்லாம் விட்டுவிட்டாரே, இனிமே சமதர்மம்பற்றி பேச மாட்டார் அவர்’’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், அய்யா அவர்கள் சொல்கிறார், ‘‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை. நான் கொண்டு வந்த தீர்மானம்தான், அந்தக் கட்சியை மாற்றி இருக்கிறது’’ என்று ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறார்.
(தொடரும்)
