14.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பணத்தாள் சுழற்சி மற்றும் கணக்கில் வராத பணம் குறையவில்லை என்பது மட்டுமல்ல; அதிகரித்துள்ளது என்பது நிதி அமைச்சரின் பதில் மூலம் வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளை மோடி அரசு தவறாக பயன்படுத்துவதை கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பஞ்சாபில் தீவிரவாதம், வேலையில்லாத் திண்டாட் டம், உ.பி.யில் ராம்சரித்மனாஸ் சர்ச்சையின் வெளிச்சத்தில் ஜாதிப் பிரச்சினை, தமிழ்நாட்டில் சங்பரிவாரத்துக்கும், தி.மு.க அரசுக்கும் இடையிலான உரசல், சங்க பரிவாரத்தில் பெண்களின் பங்கு அதிகரிப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு, மாற்ற முயற்சிகள் போன்ற பிரச்சினைகள். “குறிப்பிட்ட பகுதிகளில் எதிர்மறையான படம்” பற்றியும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விவாதம்.
தி டெலிகிராப்:
* அதானி பிரச்சினையில் இருந்து கவனத்தை திசை திருப்பும் சூழ்ச்சியாக, லண்டனில் ராகுல் காந்தி பேசியது குறித்து பாஜக நாடாளுமன்றத்தில் அமளி செய்வதாக எதிர்க்கட்சிகள் கருத்து.
– குடந்தை கருணா