மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துக! ஆளுநர் மாளிகை முன் நாளை அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு முற்றுகை

2 Min Read

சென்னை, ஜூலை 21- இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் ராதிகா, இந்திய மாதர் தேசிய சம் மேளனத்தின் மாநில தலைவர் மஞ்சுளா ஆகியோர் கூட்டாக சேப்பாக்கம் பத்திரிகை யாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சங்க பொதுச் செயலாளர் ராதிகா கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொட ரில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எந்த வித நிபந்தனையும் இன்றி அமல்படுத்த வேண்டும். நாளை (22.7.2026) ஆளுநர் மாளிகை முன்பு அனைத்து இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் கூட்டமைப்பு சார்பாக மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொகுதி மறுவரை போன்ற மசோதாக்கள் கூட்டத்தொடரில் வருகின்றது என்பதை காரணம் காட்டி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காலம் தாழ்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து, இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய குரல் கொடுக்க வேண் டும் என வலியுறுத்த உள்ளோம்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தேமுதிக தலைவரை நேரில் சந்தித்து நாங்கள் ஆதரவு கேட் டுள்ளோம். தொடர்ச்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவை கேட்க இருக்கின்றோம். மகாராட்டிரா, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, அந்த தேர்தலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். பெண்களை இரண்டாம் தர பார்வையாக பார்ப்பது தான் பிஜேபியின் சித்தாந்தம். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டோம் என்று சொல்கின்ற பாஜ ஏன் அதை அமல்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இவ் வாறு அவர் கூறினார்.

இந்திய மாதர் தேசிய சம் மேளனத்தின் மாநில தலைவர் மஞ்சுளா கூறுகையில், ‘‘33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டதாக பாஜ அரசு கூறுகின்றது. ஆனால் இதுவரை நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் அது அமல்படுத்தப்படவில்லை. ஆகவே பாஜ பெண்களையும் ஏமாற்றும் மோசடி சட்டமாகவே இதை கொண்டு வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் தொகுதி வரையறைக்கு பின்புதான் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்பது மோசடி செய்யும் பாஜ அரசின் செயல். அடுத்த தேர்தல்களிலேயே பெண் களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கின் றோம்’’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *