திருநெல்வேலி, ஜூலை21- 19.7.2026 அன்று மாலை 6 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் மய்யத்தில் மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகத்துடன் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக் கவுரையாற்றினார்.
கழக காப்பாளர் இரா.காசி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆலடி அ.எழில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநில மகளிர் மகளிர் அணி அமைப்பாளர் பெ.பாக்கியலட்சுமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் செ.சந் திரசேகரன் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன், மாவட்ட துணைத்தலைவர் ந.மகேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.பானுமதி, மாநகரச் செயலாளர் வெயிலுமுத்து, தென்கலம் கழகத் தலைவர் அய்யப்பன், சேரன் மகா தேவி ஒன்றியத் தலைவர் கோ.செல்வ சுந்தரசேகர் ஆகியோர் மாநாடு சிறப்புற நடைபெற கருத்துரை வழங்கினர்.
மாவட்ட கழக செய லாளர் இரா வேல்முருகன் தீர்மானங்களை முன் மொழிந்து செயலாக்கவுரை வழங்கினார். கழகக் காப் பாளர் சி.வேலாயுதம் விடுதலை சந்தா வழங்கினார்.
நிறைவாக மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் நன்றி கூறி நிறைவு செய்தார்.
