‘எக்ஸ்பிரஸ் விரைவு’ நெடுஞ்சாலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்

சென்னை ஜூலை 20- சென்னை – பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை – பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ எனப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2012-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் முடிந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.17,930 கோடி மதிப்பில் 2022 மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டம் 10 தொகுப்புகளாகப் பிரிக்கப் பட்டு பணிகள் தொடங்கின. 263 கி.மீ. தூரம் கொண்ட இந்த விரைவு சாலையில், கருநாடக எல்லைக்கு உட்பட்ட 71 கி.மீ. நீளமுள்ள ஹோஸ் கோட்டே – பெத்தமங்களா வரையிலான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து, போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதிகளிலும், தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. ஆனாலும், திரும்பெரும்புதூர் – அரக்கோணம் – காஞ்சிபுரம் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே மேம்பால அனுமதி, ஒப்பந்ததாரர்களின் நிதி நெருக்கடி காரணமாக பணிகள் சுணக்கமடைந்தன. இதுவரை 230 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை – பெங்களூரு நுழைவுச் சாலைப் பணிகள் அக்டோபருக்குள் நிறைவடையும்.

சென்னையில் இருந்து பெங்களூரு வுக்கு சாலை மார்க்கமாகச் செல்ல தற்போது 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *