நீர்மட்டம் 74.92 கன அடியாகக் குறைந்தது வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை

1 Min Read

மேட்டூர், ஜூலை 20– மேட்டூர் அணையின் நீர் மட்டம் 74.92 கன அடியாக குறைந்ததால் காவிரி நீர் தேக்க பகுதியில் கிணறுகள் வெளியே தெரிகின்றன.

மேட்டூர் அணை

டெல்டா விவசாயி களின் உயிர்நாடி மேட்டூர் அணை. சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். முழு கொள்ளவை எட்டும் போது கடல் போல் மேட்டூர் அணை காட்சி அளிக்கும்.

இந்தாண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்தாலும், கருநாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகரில் இருந்து தண்ணீர் திறக்கப் படாதாலும் தற்போது இந்த அணை வரண்டு காட்சியளிக்கிறது.

நேற்றைய (19.7.2026) நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்தானது வினாடிக்கு 42 கன அடியா கவும், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகவும் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 74.92 கன அடியாக உள்ளது.

கிணறுகள்

இவ்வாறு வறட்சி ஏற்பட்டுள்ளதால், மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர், மாசிலா பாளையம், சேத்துக்குழி, சாம்பள்ளி ஆகிய கிராமங்கள் அமைந்திருந்த பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் ஓடைகளாகவும், சில இடங்களில் ஆங்காங்கே இருந்த பழமையான கிணறுகளும் வெளியே தெரிகின்றன. குறிப்பாக நீர்த்தேக்க பகுதிகள் வரண்டு இருந்தாலும், கிணறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

அந்த வகையில் நீர்த் தேக்க பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிணறுகள் தற்போது வெளியே தெரிந்து காட்சி அளிப்பதை காண முடிகிறது. வரண்டு காட்சி அளிக் கும் மேட்டூர் அணையில் கிணறுகளில் மட்டும் தண்ணீர் இருப்பது போன்ற காணொலிக் காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *