லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சென்னை, ஜூலை 20- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது லண்டன் பய ணத்தை முடித்து நேற்று (19.7.2026) இரவு சென்னை திரும்பினார்.

அவருக்கு விமான நிலை யத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித் தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டா லினின் பேரனும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் சென்றார்.

அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து உதயநிதி ஸ்டாலினும் லண்டன் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஸ்டாலின், அதன்பின் சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்தார்.

தனது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (19.7.2026) இரவு அவர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுகவினர் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *