தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கை; செப்.15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, ஜூலை 20- மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

பள்ளி, கல்லூரி கல்வியைத் தொடர முடியாதவர்கள், பணிபுரியும் நபர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உயர்கல்வியை நெகிழ்வு முறையில் தொடர விரும்புவோர் அனைவருக்கும் தொலைதூரக் கல்வி படிப்புகள் நல்வாய்ப்பாக அமைகின்றன.

இந்நிலையில், 2026-2027ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *