பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் நடத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:
ஈரோடு
18.07.2026 அன்று மாலை 5 மணியள வில் பெரியார் மன்றம் ஈரோட்டில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகம் தலைமை தாங்கினார்.
சி.பாலசுப்பிரமணி. மாவட்ட ப.க.தலைவர்அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பேராசிரியர்ப. காளிமுத்து “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் 9 பதிப்புகள் வெளிவந்துவிட்டன. மனிதகுலத்திற்கு எதிரான மனிதநேயமற்ற நச்சுக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி மதக்கலவரம், ஜாதிக்கலவரத்தை உருவாக்கி இந்து ராஸ்ட்டிரத்தை உருவாக்க நினைக்கும் அமைப்புத்தான் ஆர்.எஸ்.எஸ். இதை பக்தி என்ற பேராலும், தேசபக்தி என்ற பேராலும் மக்களுக்குமயக்கமருந்து கொடுத்து ஏமாற்றும் அமைப்பு” என்பதனை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆதாரத்தோடு விளக்கும் நூல். என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்டக் கழகக் காப்பாளர் இரா. நற்குணன், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், மாவட்ட துணைத் தலைவர்வீ. தேவராஜ், மாவட்ட துணைச்செயலாளர் அ.அசோக்குமார், மாநகரத்தலைவர்தே. காமராஜ், ப.சத்தியமூர்த்தி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
“புத்தகத்தை வெளியிட்டு தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ஜெ. வீரமணி உரையாற்றினார். தமது உரையில் “தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் பொய்யாகவே பேசி ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசையும். தற்போதுள்ள தமிழ்நாடு அரசையும் நினைவுபடுத்துகிறது. பெண்கள் சமத்துவத்திற்கு எதிரானது – மனிதகுலத்திற்கே எதிரான இயக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்த நூலை எல்லோரும் வாங்கிப் படித்து ஆர்.எஸ்.எஸ்.-ன் சதிவலை, சூழ்ச்சிகளை தெரிந்து கொள்வோம் என்று தமது உரையில் குறிப்பிட்டார். நூலை போட்டி போட்டு வாங்கிச் சென்றார்கள் 100 புத்தகமும் 15 நிமிடத்தில் விற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நூலைப் பெற்றுக் கொண்ட பெருந்தகையாளர்கள். -ஆ. செந்தில்குமார் மாவட்ட துணைச் செயலாளர் தி.மு.க., ப.க.பழனிச்சாமி மாவட்டப் பொருளாளர் தி.மு.க. மருத்துவர் தமிழ்க்கொடி ப.க., சம்பத் ப.க., ஈரோடு மக்கள் இயக்கம் நிலவன், ஆதித்தமிழர் பேரவை வீர வேந்தன், பள்ளிபாளையம் பொன்னுசாமி, அபாட்டுச்சாமி, பி.என்.எம். பெரியசாமி ப.க., வி.மா.ஆறுமுகம், ராஜேந்திர பிரபு ப.க, பா.மாசிலாமணிதிராவிடப்பேரவை. மற்றும் தி.க, தி.மு.க, தோழர்கள் வாங்கிச் சென்றார்கள். இறுதியாக ப.க. மாவட்ட செயலாளர் தங்கவேலு நன்றி கூறினார்.
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தமிழர் தலைவர், ஆசிரியர், கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” என்ற தலைப்பில் எழுதிய நூலினை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மரு.குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் நட ராஜன் தலைமையில் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவின் துவக்கமாக பகுத்தறிவாளர் கழகம் துணைச் செயலாளர் சு.ராமு வரவேற்புரையாற்றினார், பின்னர் பகுத்தறிவாளர் கழகம் மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்தி தொடக்க உரையாற்றினார்,
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் இ.வளனறிவு அவர்கள் நூலினை அறிமுகம் செய்து, பின்னர் இந்த நூலினை நாம் ஏன் படிக்க வேண்டும்? அதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் சிறப்பம்சம் குறித்தும், ஆர்எஸ்எஸ்காரர்களின் துரோகம் மற்றும் சூட்சுமங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.
இந்த விழாவில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்டக் காப்பாளர் ந.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.அரங்கராசன் மற்றும் சி.பிச்சைபிள்ளை, துணைச் செயலாளர்கள் துரைசாமி மற்றும் சரவணன், மகளிரணி மாவட்டத் தலைவர் மரு.குணகோமதி, சூரியகலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் நகரத் தலைவர் ஆ.துரைசாமி, இளைஞர் அணித் துணைச் செயலாளர் பா.காளிதாசன், மாவட்டச் செயலாளர், மக்கள் அதிகாரம் காவேரி நாடன், தமிழ்ப் புலிகள் கட்சி செயலாளர் குரல் வள்ளுவன், திராவிடர் கழக வேப்பந்தட்டை ஒன்றிய ச் செயலாளர்கள் மு.சர்புதீன், சி.இராசு, வேப்பூர் ஒன்றியத் தலைவர் நா.அரங்கையா உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டு நூலினை பெற்றார்கள்.
நிகழ்வின் இறுதியில் மாவட்டத் துணைத் தலைவர் இரா.சின்னசாமி நன்றி உரையாற்றினார்.
ஓசூர்

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஓசூரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” என்கின்ற நூல் அறிமுக நிகழ்ச்சி பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.
வந்திருந்த அனைவரையும் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் செ.செல்வி வரவேற்றார்.
தொடர்ந்து திமுக மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் நூலை அறிமுகம் செய்து வழங்க சி.பி.எம் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர்.சி.சுரேஷ், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் தோழர்.ஜாகீர் ஆலம், வழக்குரைஞர் சுஹேப்,மே17 இயக்கம் தோழர்.மோகன்ராஜ்,தமிழ்
தேசக் குடியரசு இயக்கம் தோழர்.ராமமூர்த்தி, மேனாள் மதிமுக நகரச் செயலாளர் ஈழம் குமரேசன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் தோழர்.ஒப்புரவாளன், பெரியார் பெருந்தொண்டர் துரை இராவணன், தோழர் பூபதி, தோழர் சிவாஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரை நூல் குறித்து கருத்துரையை திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரை தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள், அ.செ.செல்வம், கோ.கண்மணி, மாவட்டச் செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட இணைச் செயலாளர்கள் ச.எழிலன், இரா.ஜெயசந்திரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சின் தொடக்கத்தில் அண்மையில் நீட் தேர்வு காரணமாக தன் உயிரை மாய்த்துக்கொண்ட ஒசூரை சார்ந்த வெற்றியானந்தம் படத்தினை திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் மணியம்மையும் திமுக மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ் இணைந்து திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட GENZ DMK அ.அன்பானந்தம், வழக்குரைஞர் அ.சுஹேப் மனித நேய மக்கள் கட்சி ஆகியோர்க்கு சிறப்பு செய்யப்பட்டது.
சோழவந்தான்

18.7.2026 அன்று மாலை சோழவந்தான் பேரூராட்சியில் மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன் தலைமையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”, “ஆர்.எஸ்.எஸ். பற்றி” இரண்டு நூல்கள் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் கா.செயராமன் நூல்களை வெளியிட்டார்.
பவர் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி தாளாளர் த.ரஜினிகாந்த் உள்ளிட்ட பெருமக்கள் பெற்றுக் கொண்டார்கள் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் தொழிலாளர் பேரவைத் தலைவர் கா.சிவகுருநாதன், மாநில கழக மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலட்சுமி, மதுரை புறநகர மாவட்ட கழகத் தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட கழகச் செயலாளர் பா.முத்துக் கருப்பன் மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
நகர தலைவர் க.தங்கராசு வரவேற் புரையாற்றினார், நகரச் செயலாளர் க.ஆறுமுகம் நன்றி கூறினார்.
