கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.7.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிரதமர், முதலமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் மசோதா மீதும் மேலும் விவாதம்: வரைவு அறிக்கையை ஏற்பது ஒத்திவைப்பு.

* அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த வழக்கில் பத்ரிநாத் கோயில் முன்னாள் அதிகாரி ராஜேந்திர சவுகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* என்சிபி இணைப்பு, அமைச்சரவை ஒப்பந்தம் மூலம் சரத் பவாரை என்.டி.ஏ-வில் சேர்க்க பாஜக முயற்சி; சுனேத்ரா எதிர்ப்பு. முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஜெயந்த் படேல் மற்றும் ஜிதேந்திர அவாத் மகாராட்டிரா அமைச்சரவையில் இடம் பெறலாம். சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி இந்து:

* வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) தரவை தேர்தல் அல்லாத பணிகளுக்கு, குறிப்பாக குடியுரிமை நிர்ணயத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனுவில் தேர்தல் ஆணையத்திற்கும் மேற்கு வங்க அரசுக்கும்அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* உயர்கல்வி மசோதா ஒழுங்குமுறை அதிகாரங்களை மய்யப்படுத்தி, பல்கலைக்கழக தன்னாட்சியை பாதிக்கக்கூடும்: நாடாளுமன்றக் குழு. VBSA மசோதா, 2025 கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா, தற்போது உள்ள உயர்கல்வி அமைப்பில் உள்ள நிறுவன தன்னாட்சியை பலவீனப்படுத்தும் வகையில், விரிவான ஒழுங்குமுறை அதிகாரங்களை ஒரே மத்திய அமைப்பில் குவிக்கக்கூடும் என்று குழு கவலை தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “10 ஆண்டுகளில் 7.5 கோடி மாணவர்கள் பாதிப்பு; வினாத்தாள் கசிவு வழக்கமானதாகிவிட்டது” – ராகுல் காந்தி. பணமும் செல்வாக்கும் கொண்ட சிலருக்காக நடைபெறும் இந்த முறைகேட்டால், பெரும்பாலான நேர்மையான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்வுத்தாள் கசிவு கல்வி அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *