கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.7.2026

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எம்எல்ஏக்களை கட்சி மாறச் செய்ய குதிரை பேரம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையை சிபிஅய்க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு 9ஆம் வகுப்பில் மும்மொழியை அறிமுகப்படுத்துவதா? உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி பி.வி. நாகரத்னா கடும் எதிர்ப்பு. பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.

* தொகுதி மறுவரையறை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு கடிதம்.

* கட்சி விழாக்களில் பால் அபிஷேகம், நீர் அபிஷேகம் செய்யத் தடை, தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி உத்தரவு. கட்சியின் கொள்கைக்கு விரோதமானது என கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ஒன்றிய அரசு 5 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை உள்ளடக்கிய தொகுதி மறுவரையறை (DELIMITATION) தொகுப்பு தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை.

தி இந்து:

* VBSA கல்வி மசோதாவுக்கு எதிர்ப்பு: உயர் கல்வி மீதான மாநிலங்களின் அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்தி, அதிகாரங்களை மய்யப்படுத்தும் அபாயம் உள்ளதால், VBSA மசோதா, 2025-அய் கேரள மாநில எம்.பிக்கள் எதிர்க்க வேண்டும் என கேரள உயர்கல்வி அமைச்சர் ரோஜி எம். ஜான் வலியுறுத்தியுள்ளார்.

* VBSA மசோதா குறித்து நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை: இந்த மசோதா உயர்கல்வி ஒழுங்குமுறை அதிகாரங்களை ஒரே மத்திய அமைப்பிடம் குவித்து, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை பாதிக்கக்கூடும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு கவலை தெரிவித்துள்ளது. மேலும், மசோதாவில் முன்வைக்கப்பட்டுள்ள தண்டனை விதிகள் தன்னிச்சையாக அமல்படுத்தப்பட கூடாது என்றும் குழு குறிப்பிட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* ஆங்கிலம் ‘வெளிநாட்டு மொழி’ என சிபிஎஸ்இ வகைப்படுத்தியதற்கு சர்ச்சை: ஆங்கிலத்தை வெளிநாட்டு மொழியாகக் கருதி, இந்திய மொழிகளுக்கு எதிராக நிறுத்துவது அரசின் கருத்தியல் நோக்கத்தை பிரதிபலிப்பதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். அரசியலமைப்பில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக உள்ள நிலையில், அதை ஒரு சுற்றறிக்கையால் “வெளிநாட்டு மொழி” எனக் குறிப்பிடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தேர்தல் ஆணையம் மீது திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு:

* திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ’பிரையன், கிளர்ச்சி அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய கால நீட்டிப்பை கண்டித்து, “தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அலுவலகம் போல செயல்படுகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *