இந்தியாவின் ஜனாதிபதியாக இருக்கும் பாபு ராசேந்திர பிரசாத் ஒரு பார்ப்பனர். டிப்டி பிரசிடெண்ட் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு பார்ப்பனர். இந்தியாவின் பிரதம மந்திரி பண்டிட் நேரு ஒரு பார்ப்பனர். பார்லிமெண்ட் தலைவர் அனந்த சயனம் அய்யங்கார் ஒரு பார்ப்பனர். இப்படி ஆட்சியின் முக்கியமான பதவிகளில் எல்லாம் பார்ப்பனர்களே. அனைத்தும் அவர்களுக்கே உரியது என்று ஆக்கப்பட்டே நடந்து வந்து இருக்கின்றது. இப்படிப்பட்ட ஆதிக்கத்தை எதிர்க்கின்றபோது சிலர் நம்மீது ஆத்திரப்படுவது பொறுப்புள்ள ஒரு செயலாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
