ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

சென்னை, ஜூலை 17- நவீனா – மணிகண்டன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன் னீர்செல்வம், மற்றும் நண்பர்கள் முன்னி லையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (15.7.2026).

மணமகள் நவீனா மணமுறிவு பெற்றவர்.இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பத்து வயது மகன் லித்தின் புற்றுநோய் பாதிப்புடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன்.  தன் அம்மா தன் அப்பாவாகிய முதல் கணவனால் அடைந்த கொடுமைகளை நேரில் கண்டவன் அவனுக்கு தான் இறந்துவிடுவோம் என்பதும் தெரியும்.

தான் இறப்பதற்குள் அம்மா ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக இன்னொரு திருமணம் செய்யச் சொல்லி, தங்களுக்கு நன்கு அறிமுகமான மணிகண்டனை திருமணம் செய்விக்க நம் திருமண நிலையத்திற்கு அழைத்து வந்தான். நம்மிடம் அந்தச் சிறுவன் லித்தினே சொன்னது இது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *