காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கருநாடகம் மறுப்பு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஜூலை 16-காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கருநாடகம் மறுப்பு தெரிவித் துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை முறை கூட்டம் நடத்தப் பட வேண்டும் என்ற விதி இல்லை. எப்போது வேண்டுமானாலும் அது கூடும். அந்த வகையில் நேற்று (15.7.2026) காணொலி மூலம் அந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் 4 மாநில பிரதிநிதிகளும் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். கூட் டத்தின் தொடக்கத்தில் நீரியல் புள்ளி விவரங்கள் அனைத்து மாநிலங் களிடமிருந்தும் பெறப்பட்டன.

தண்ணீர் திறக்க இயலாது

பின்னர், அதிகாரப் பூர்வ மில்லாத விவாதங்கள் நடை பெற்றன. காவிரி ஒழுங் காற்று குழுவுக்கு எந்த மாநிலத் தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல் லாததால் கூட்டத் தில் பேசுவதை எதையும் பெரிது படுத்தாது.

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தற் போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறக்க இயலாது என்றும், மழை பெய்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கருநாடக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருநாடக அணைகளில் உள்ள தண்ணீர் தங்களது குடிநீர் தேவைக்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ள கர்நாடக அதி காரிகள் 28-ஆம் தேதிக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். 28-ஆம் தேதி அடுத்த கூட்டம் நடை பெறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ்நாடு அதிகாரிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஒழுங்காற்று குழுவால் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்பதால் கூட்டம் சாதாரணமாக நடந்து முடிந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *