இலங்கையின் கிளிநொச்சி கம்பன் கலைக்கோவில் வளாகத்தில், வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் 197-ஆவது திருவள்ளுவர் சிலையை அதன் தலைவர் வி.ஜி. சந்தோசம் திறந்து வைத்தார். இந்த விழாவில் கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் நாராயண ஞானதேசிக சுவாமிகள், பம்பாய் தெற்காசிய ஸ்டாண்டர்ட் வங்கி அதிகாரி வி. மகாலிங்கம், மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அய். விஸ்வநாதன், கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ. கணேஷ் தெய்வநாயகம், கம்பபாரதி இலங்கை ஜெயராஜ், முல்லைத்தீவு அரச அதிபர் அ. உமாமகேஸ்வரன், வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, அய்ஸ்வர்யலட்சுமி தத்துவக் கோவில் கவுரவ தலைவர் மாலா சபாரட்ணம், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் அபிராமி கயிலாபிள்ளை மற்றும் தொழிலதிபர் திலக் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வி.ஜி. சந்தோசம், உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் சிலைகளைத் தாங்கள் நிறுவி வருவதாகவும், இலங்கையில் இதுவரை 24 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
