தாம்பரம், ஜூலை 14- 12.7.2026 அன்று மாலை 6 மணி அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அமையப்பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாதந்தோறும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
வரும் 2026 செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் சேர்த்து அமைப்பை பலமாக உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தாம்பரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக புதிய பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள்:
பெ.அண்ணாதுரை (தலைவர்), வி.புஷ்பலதா (செயலாளர்), கனக விநாயகம் (துணைத் தலைவர்), வை.சவுந்தரராஜன் (துணைச் செயலாளர்), பாபு (அமைப்பாளர்) – ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் வி.புஷ்பலதா, ப.முத்தையன், பெ.அண்ணாதுரை, கோ.நாத்திகன், விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், தனசேகர், க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் சு.மோகன்ராஜ், சாந்தா ஜெய்கணேஷ், க.பிரீதா, ஜெ.குமார், ச.தே.பொற்செழியன், மா.குணசேகரன், சா.தாமோதரன், மா.ராசு, அ.கருப்பையா, மா.குமார், பி.சிறீதர், க.இல.பழனிவேலன்,
மா.சு.இராமசந்திரன், வை. சவுந்தர்ராஜன், சு. பால்பாண்டி, எஸ்.ஆர்.வெங்கடேஷ், ஆ.வெற்றி குமரன் மற்றும் ப. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
