பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமான குஜராத், கல்வியில் பின்னடவை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசின் SDG அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் 45.5% – 49.18% மாணவர்கள் +2 வகுப்பை நிறைவு செய்வதற்கு முன்பே இடைநிற்றலை சந்தித்துள்ளனர். 2025ஆம் கல்வியாண்டில் 50.82% மட்டுமே தேர்ச்சியடைந்த நிலையில், இது தேசிய சராசரியை விட குறைவாகும். இதனால், பள்ளிக்கல்வியில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
பாபா ராம்தேவின்
‘இந்து ராஷ்டிரா’ பேச்சால் சர்ச்சை
‘இந்து ராஷ்டிரா’ பேச்சால் சர்ச்சை
இந்துராஷ்டிரம் குறித்து பாபா ராம்தேவ் கூறியது சர்ச்சையாகியுள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை நம் மதங்கள் வேறுபடலாம், ஆனால் நம் அனைவரின் மூதாதையர்களும் ஸநாதன இந்து ஆரிய-வேத மரபைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதை சாடிய காங்., சல்மான் குர்ஷித், அனைவரும் ஸநாதனிகள் என்றால், ஏன் இத்தனை பிரிவினை முயற்சிகள் நடக்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை…
92 லட்சம் பேர் நீக்கம்
92 லட்சம் பேர் நீக்கம்
மகாராட்டிராவில் ரூ.1,500 மகளிர் தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேரை அம்மாநில அரசு நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 62 லட்சம் பேர் இ-கேஒய்சி பூர்த்தி செய்யாததால் நீக்கப்பட்டுள்ளனர். இதில், இதர திட்டங்களில் பயன்பெறுதல், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம், ஒரே குடும்பத்தில் 2 பயனாளிகள் உள்ளிட்ட காரணங்களும் அடங்கும். 29,000 ஆண்களும் இத்திட்டத்தில் ரூ.1,500 பெற்றது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
