அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு; ஒரு லட்சம் மக்கள் தவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இட்டாநகர், ஜூலை14- அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 29 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் 425 கிராமங் களைச் சேர்ந்த 97,182 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அவசரக் கால செயல்பாட்டு மய்யம் தெரி வித்துள்ளது.

குமே ஆற்றின் மேல் நிலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் டாமின் மற்றும் பார்சி-பார்லோ வட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. அப்பகுதி களில் பாலங்கள் வெள் ளத்தில் அடித்துச் செல் லப்பட்டுள்ளதுடன், அரசு ஆய்வு மாளிகை, கிறிஸ்து கோயில் மற்றும் முன்னணி கல்வி நிறுவனமான செயின்ட் தாமஸ் பள்ளியும் நீரில் மூழ்கியுள்ளன.

இதுபோல பக்ரோ கிராமம் அருகே ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவால் 13ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் முடங்கியுள்ளது. சேலா சுரங்கப்பாதைச் சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப் பட்டதால், பயணிகள் பழைய சேலா சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், போதின்-கிமின் சாலையும் முடங்கி யுள்ளது.

இந்தக் வெள்ளப் பெருக்கால் 541.75 ஹெக் டேர் பயிர் நிலங்களும், 1,010 ஹெக்டேர் வனப் பகுதியும் நாசமாகியுள்ளன. மேலும் 150 சாலைகள், 19 பாலங்கள், 221 குடிநீர் விநியோகக் கட்டமைப்புகள், 58 அரசு கட்டடங்கள், 10 நீர் மின் நிலையங்கள், 2 மருத்துவமனைகள், 3 பள்ளிகள் மற்றும் நூற்றுக் கணக்கான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

தற்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட மாவட்ட நிர்வாகம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து தீவிர ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *