மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில், திராவிட மாணவர் கழகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா 12.7.2026) நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் தலைமையேற்றார். நோட்டுக்களை மதுரை மாவட்டக் காப்பாளர் சே.முனியசாமி கொடையாக வழங்கினார். மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் நா.கணேசன் சிறப்புரையாறறினார். மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா. நேரு கருத்துரை வழங்கினார். மதுரை புறநகர் மாவட்ட தலைவர், த.ம.எரிமலை, மாநில மகளிர் அணி அமைப்பாளர்
பெ.பாக்கியலட்சுமி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் இரா.கலைச்செல்வி, மகளிர் பாசறை தலைவர் போ.காவேரி,, மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் பா.சதீஸ்குமார், திராவிட மாணவர் கழக அமைப்பாளர் ச.அறிவுச்செல்வி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். திராவிட மாணவர் கழக செயலாளர் ம.ரஞ்சித்குமார் நன்றியுரையாற்றினார்.
இலவச நோட்டு வழங்கும் விழா
Leave a Comment
