பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தை பேண வேண்டியதின் அவசியம்!

1 Min Read

எலும்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்தில் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது முக்கியம். இருப்பினும் இளமை பருவத்தில் எலும்புகளை பாதுகாப்பாக பராமரிப்பது முக்கியம். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு பிறகு எலும்பில் இருக்கும் கால்சியம் குறையத் தொடங்கும். உலக அளவில் இந்திய பெண்கள்தான் எலும்பு ஆரோக்கிய பிரச்சினையால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்களுக்கு எலும்பு நிறை அல்லது எலும்பு வலிமை குறைவாக இருக்கிறது. சிறிய அல்லது மெல்லிய எலும்புகள் கொண்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறுகிறது. இந்த ஹார்மோன்தான் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையும்போது மெனோபாஸ் நெருங்கும்.

எலும்புகளை பாதுகாக்கும் வழிமுறை

உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கம், கால்சியம், வைட்டமின் டி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல், மது, புகை பழக்கத்தை தவிர்த்தல் போன்றவை எலும்பு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க அல்லது குறைக்க உதவும். அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்துக்கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடலில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் கால்சியம் மாத்திரைகளை பரிந்துரைப்ப துண்டு. அவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *