கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.7.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதுக் கட்டுப்பாடு. பெற்றோரின் எஸ்அய்ஆர் விவரத்தை புதிய வாக்காளர்கள் தர வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு.

* 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்காமல் சஸ்பெண்ட் செய்யலாம்: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “ராமன் கோயில் நன்கொடை விவகாரத்தில் பிரதமர் மோடியை பொறுப்பேற்கச் செய்வோம்” – காங்கிரஸ் தாக்குதல் தீவிரம். ராமன் கோயிலுக்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலித்த பாஜக–ஆர்எஸ்எஸ் அமைப்புகள், பின்னணியில் “திருட்டுக் கும்பலை” நடத்தி வந்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினார். ராமன் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி இந்து:

* மானிய நிதி பயன்பாட்டு விவரங்களை வெளியிட அய்அய்டி–மதராசுக்கு உத்தரவு: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), 2005இன் கீழ் கோரப்பட்ட 2023–2024 நிதியாண்டுக்கான மானிய (GRANT-IN-AID) நிதி பயன்பாட்டு விவரங்களை திட்ட வாரியாக வெளியிடுமாறு இந்திய தகவல் ஆணையம் (CIC), இந்திய தொழில்நுட்பக் கழகம்–மதராசுக்கு (IIT-M) உத்தரவிட்டுள்ளது.அனன்யா துபே தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தி டெலிகிராப்:

* அயோத்தி ராமன் கோயிலும் அருங்காட்சியகமும் சேர்த்து சுமார் ரூ.1,800 கோடி செலவு; ஆகஸ்ட் 15க்குள் பணிகள் நிறைவு பெறும் – அயோத்தி ராமன் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

* “கொள்ளையர்களையும் திருடர்களையும் காப்பாற்று வதிலேயே நாட்டின் முழு அமைப்பும் ஈடுபட்டுள்ளது. “ராமன் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்” ராமன் கோயில் நன்கொடை ஊழல் குற்றச்சாட்டில் கெஜ்ரிவால் கடும் தாக்கு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *