காட்டுத் தீயாகப் பரவும் கோயில் காணிக்கைத் திருட்டு கேதார்நாத் பத்ரிநாத் கோயிலிலும் கையாடல்!

3 Min Read

புதுடில்லி, ஜூலை 13- அயோத்தி ராமன் கோயில் காணிக்கைப் பணம் திருட்டைத் தொடர்ந்து உத்​தரகாண்ட் மாநிலத்​தில் உள்ள கேதார்​நாத் மற்றும் பத்​ரி​நாத் கோயில்​களில் நிதி முறைகேடு நடந்துள்ளது. இதில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது கடுமை​யான சட்​டப்​பூர்வ நடவ டிக்கை எடுக்க உத்த​ரகாண்ட் அரசு உத்​தரவு பிறப்பித்துள்ளது.

அயோத்தி ராமன் கோயில் காணிக் கைத் திருட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணைக் குழு விசாரணை நடத்தி, பலரை கைது செய்துள்ளது. இந்த நிலையில், கேதார்நாத் கோயில் நிர்​வாகத்​தில் விஐபி (VIP) விருந்தினர்களின் தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவுகளுக்காகக் கோயிலின் பொது  நிதியிலிருந்து முறை யான ஒப்புதல் பெறாமல் முன்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது நிதி நிர்வா கத்தில் நடந்துள்ள மிகப்பெரிய விதி மீறல் என முதற்கட்ட விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ளது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இது தொடர்பாகச் சுற்றுலாத்துறை துணைச் செயலாளர் அனில்குமார் பாண்டே அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அப்போதைய கோயில் மேலாளர், முதன்மைப் பொறுப்பு அதிகாரி, முதன்மைச் செயல் அதிகாரி ஆகியோர் மீது ‘சிறீபத்ரிநாத் – கேதார்நாத் கோயில் கமிட்டி சட்டம் 1939’-இன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கத் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்ரிநாத் கோயில்
காணிக்கை திருட்டு

மற்றொரு நிகழ்வாக, பத்ரிநாத் கோயிலில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணம் எண்ணப்பட்டபோது பெரும் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. பாதுகாப்பு விதிகளை முழுமையாக மீறி, காணிக்கை அறையிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாகக் கோயில் பொறுப்பு அதிகாரி யுத்வீர் புஷ்பவான் அளித்த புகாரின் பேரில் பத்ரிநாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கில் இதுவரை 5 முக்கிய சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகால கோயில் வங்கி கணக்கு விவரங்களைக் காவல் துறையிடம் ஒப்படைக்கக் கோயில் கமிட்டி முடிவு செய்துள்ளது.

சிசிடிவி (CCTV) காட்சிகளில் சிக்கிய ஊழியர்

ஜூலை 2 ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் ஆய்வு செய்த போது அதிர்ச்சித் தகவல்கள் வெளி யாகின. தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள கோயில் ஊழியர் பிரமோத் நவுடியல், காணிக்கை எண்ணும் அறையிலிருந்து ரூ.500, ரூ.100 நோட்டுக் கட்டுகள், தங்க-வெள்ளிக் காசுகள், சாலிகிராமக் கற்கள் (பூஜைக் கற்கள்) மற்றும் சுமார் 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காணிக்கை கவர்களைத் திருடி, தனது சொந்த அலுவலக அறையில் பதுக்கியது கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

சாமோலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுர்ஜித் சிங் பன்வார் கூறுகையில்:

‘‘சிசிடிவி கட்டுப்பாட்டு அறை அதிகாரி பன்வார், காணிக்கை எண்ணும் போது உடனிருந்த ஹரேந்தர் கோத்தாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வா கத்தின் உள்விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட கைது நடவடிக்கை பாயும்’’ என்றார்.

நீதிமன்றத்தில் ஊழியர் மனு

இதற்கிடையே, தன் மீதான பணியிடை நீக்க உத்தரவையும் காவல்துறை வழக்கையும் எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் பிரமோத் நவுடியல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அலோக் மெஹ்ரா, இது குறித்து கோயில் கமிட்டி பதிலளிக்க உத்தரவிட்டார்.

தற்போது இந்த முறைகேடு வழக்கு களை உள்ளூர் காவல்துறை, சிறப்புப் புலனாய்வுக் குழு, கோயில் கமிட்டியின் துறை ரீதியான குழு மற்றும் கர்வால் கோட்ட ஆணையர் தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரித்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *