ஏழுமலையான் எங்கே போனான்! திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்!

1 Min Read

திருமலை, ஜூலை 12 திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சிறுத்தையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

திருப்பதி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் நலன் கருதி, பகல் நேரங்களில் மட்டுமே மலையேறவேண்டும், பக்தர்கள் கும்பலாக சேர்ந்து மலை யேறவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள், வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக நேற்று (11.7.2026) நள்ளிரவு பக்தர்கள் மலையேறினர். லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சென்றபோது, திடீரென மலைப்பாதையில் சிறுத்தை வந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்தபடி அங்கும் இங்கும் ஓடினர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், கட்டைகளை கொண்டு சத்தம் எழுப்பி சிறுத்தையை விரட்டினர்.

பின்னர் வனத்துறை ஊழியர்கள், மலைப்பாதையில் பக்தர்கள் குழுக்களாக செல்லவேண்டும். தனியாக செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட் டத்தை கண்காணித்து வருகின்றனர்.

திருப்பதி உபாத்யாய நகரில் இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத் தில் தவித்து வருகின்றனர். இத னால் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பேனர் வைத்து, இரவில் தனியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி யுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *