தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே 

மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

சென்னை, ஜூலை 12- சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே வகை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-இன்படி, உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகளை பச்சை நிற தொட்டியில் போட வேண்டும். காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியில் போட வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்ற சுகாதார கழிவுகளை பாதுகாப்பாக சுற்றி தனியாக சிவப்பு நிற தொட்டியில் போட வேண்டும்.

பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட வீட்டு அபாயகரக் கழிவுகளை தனியாக கருப்பு தொட்டியில் போட வேண்டும்.

தூய்மைப் பணியாளர் வரும் போது, அந்த வாகனத்தில் இந்த வண்ண தொட்டிகள் இருக்கும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.

எனவே, அனைவரும் வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறினால் அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *